சாலமன் பாப்பையா
பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா (கலை மற்றும் கல்வி) பத்மஸ்ரீ விருது பெறுகிறார்.
தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலேயே சாலமன் பாப்பயை தான். பட்டிமன்றம் என்றாலே வயதானவர்களுக்கானது என்று இருந்ததை உடைத்து, தனது தமிழ் ஆளுமை, நகைச்சுவை, டைமிங் ஆகியவற்றால் 2k கிட்ஸையும் பட்டிமன்றம் பார்க்க வைத்த பெருமை சாலமன் பாப்பையாவுக்கே சேரும். ஏறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய துறையில் சேவையாற்றி வரும் இவர், தற்கால சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழகத்தில் எம்ஏ தமிழ் பட்டப்படிப்பு முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதில் படித்த முதல் பேட்ஜ் மாணவர்களில் இவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக சமூக சார்ந்த தலைப்புகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்
Comments