எதிலும் கலப்படம்

 எதிலும் கலப்படம் என்பது இன்றைக்கு மக்கள் உணர்வை வெளிக்காட்டும் ஊடகங்கள் வரை நீட்சி அடைந்திருப்பது ,காலத்தின் மீதான விமோசனமற்ற சாபம்..


இன்று Fake survey, Fake interview, fake prank என தன் வருமான வளத்துக்காக தாங்களே செட்டப் செய்து செய்தி வெளியிடும் ,கடிவாளம் இல்லாத இணைய YouTubeகளின் தரம் தாழ்ந்த நிலை ,நம்பகத்தன்மையை முற்றிலும் அகற்றி விட்டிருக்கின்றன..
சமீபத்திய சென்னை டாக் யூட்யூப் தளத்தின் குழுவினரின் கைது மற்றும் அதில் காசு வாங்கி ஆபாச பேட்டி கொடுத்த பெண்ணின் மீதான விசாரணை வளையங்கள் ,இப்போது ஒரு முதல் எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது, ஊடகங்களுக்கு..
இதில் கிளைகதையாக குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. சொற்ப 1500₹ வாங்கி கொண்டு சரக்கு , த்ரீசம் , ஃபக் என வெளிப்படையாக தன் கருத்தியலை பதிவு செய்த பெண்ணின் சமீபத்திய பேட்டி ஒன்று ஒரு பெண் சமூகத்தின் மீதான சவாலை கண் முன் நிறுத்தி இருக்கிறது..
ஆம், இதையெல்லாம் செய்து விட்டு கொஞ்சமும் சமூக பொறுப்பும், குற்ற உணர்வும் இல்லாத அந்த பெண் ,தனக்கான நியாயம் கற்பிக்க gender equality, பெண்கள் தன்னம்பிக்கை , கெத்து , தைரியம், பெண்ணியம் என தங்க முலாம் பூச முனைகிறாள் . சற்று தடுமாறினாலும் நீங்கள் அந்த வாதத்தை ஏற்று கொள்ள கூட அபாய வாய்ப்புண்டு. சமீபங்களில் பல பெண்கள் தங்கள் சமூக தவறுகளை கோர்த்து மாலை செய்து , அதற்கு பெரியாலிஸம் என்று பெயரிட்டு வருவது ஏனோ நினைவுக்கு வருகிறது..
ஆக, இந்த நிகழ்வு எல்லாருக்குமான அபாயமணி எனினும், கொஞ்சம் கூடுதலாக பெண்களுக்கு விடபட்டிருக்கும் சவால் ..தெளிவாக சொல்லவேண்டும் எனில், தங்கள் உரிமைகளை நிலை நாட்ட பிரயத்தன படும் , அதே வேளையில் அதன் நீள, அகலங்களை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்..
சிங்க பெண் உங்கள் இலக்கு ஆகட்டும்.அதே நேரம் ,அதன் இலக்கணங்கள் புரிந்தாளுங்கள்


--நாகராஜ்

Comments

மேடி... said…
Correct ஆ சொல்லிருக்
கேள்....

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,