சிறப்பு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு!

 

சிறப்பு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ரயில் சேவை முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேசமயம் பொதுமக்கள் தேவைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பண்டிகை காலங்களை ஒட்டி கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதாவது பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரிய ஒப்புதலுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



திருச்சி இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் எண் 06849 ஆனது மதியம் 12.15 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு செல்லும். மறுமார்க்கமாக 06850 சிறப்பு ரயிலானது மதியம் 2.35 மணிக்கு இரவு 8.05 மணிக்கு திருச்சியை போய் சேர்கிறது.



* நெல்லையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் எண் 06791 ஆனது மதியம் 12.50 மணிக்கு பாலக்காடு செல்லும். மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து வரும் 5ஆம் தேதி மாலை முதல் 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு நெல்லைக்கு வரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 06079 ஆனது மதியம் 1.40க்கு பெங்களூரு செல்லும். அங்கிருந்து மறுமார்க்கமாக பெங்களூருவில் மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி