கரும்பு சாறு பொங்கல்

 பொங்கல் சிறப்பு : இனிப்பான கரும்பு சாறு பொங்கல்


பொங்கலில் பல்வேறு வகை உள்ளன. அதில் தைப்பொங்கல் சிறப்பாக கரும்பு சாறு பொங்கல் செய்முறையை பாருங்கள்.



தேவையான பொருட்கள்

 

கரும்பு சாறு - லிட்டர்

அரிசி - அரை கப்

நெய் - விருப்பத்திற்கு ஏற்ப

சுக்கு - சிறிதளவு

முந்திரி - கைப்பிடியளவு

திராட்சை - கைப்பிடியளவு

பால் - அரை கப்

 

செய்முறை

 

சுக்கை நன்றாக பொடித்து கொள்.

கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வை.

அதே கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும்போது அதனுடன் பாலை சேர்.

இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால், கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரிதிராட்சைசுக்குத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.  இனிப்பான கரும்பு சாறு பொங்கல் தயார். 




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,