பிரிஸ்பேனில் வெற்றி, தொடர் வெற்றி.
பிரிஸ்பேனில் வெற்றி, தொடர் வெற்றி.
கனவு நனவான வெற்றி.
எல்லா எதிர்நிலைகளும் இந்திய அணிக்கு எதிராக அணிவகுத்திருந்தன.
அணித்தலைவர், ஸ்டார் பேட்ஸ்மேன் ஊருக்குப் போய்விட்டார். அவரிடத்துக்கு வரவேண்டிய ராகுல் காயப்பட்டார். சிட்னியில் விஹாரியும் ஹாம்ஸ்ட்ரிங் அவதியால் இல்லை.
ஷாமி உமேஷ் பும்ரா ஜடேஜா அஷ்வின் என்று முன்னணி வீச்சாளர்கள் இல்லை.
இறுதி ஆட்டத்துக்கு யாரைத் தேர்வு செய்வது.
சிட்னி'யில், அஷ்வின் வேடிக்கையாகச் சொன்னார்:
"ரஹானே'க்கு வேறு சாய்ஸ் இல்லை. யாரெல்லாம் கபா'வுக்கு (பிரிஸ்பேன்) வருகிறீர்கள், கை தூக்குங்கள் என்று கேட்டு, தேறுகிறவர்களை அணியாக்கி ஆடவேண்டும் என்று சொன்னார். அவ்வளவு depleted side இது.
ஆடவந்த பிறகு ஸைனி'யும் முழுத் தகுதியோடு இல்லை.
அனுபவமற்ற வீச்சாளர்கள். மூன்று சீனியர் பேட்ஸ்மென்களைச் சுற்றி இதரர்கள் திரண்டார்கள்.
ஒரு நட்சத்திர பெர்ஃபார்மன்ஸால் வென்றோம் என்று சொல்லக் கூடாது.
எல்லாருடைய பங்கும் இருந்தது.
ரோகித் முதல் இன்னிங்ஸில் சரளமாக ஆடினார். அவருடைய ஜென்டில் push ஒன்று ஸ்ட்ரெய்ட் ட்ரைவாக எல்லைக்கு ஓடியதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பின் காலில் நகர்ந்து backward பாய்ன்ட் திசையில் ஒரு வலுவான பஞ்ச்'ம் அழகு.
செஞ்சுரி was there for asking. ஆனால், வீணடித்தார். Thrown away his wicket. தகுதியான பந்தும் அல்ல அது. 100 வது டெஸ்டில் லயனுக்கு ரோகித்தின் இலவசப் பரிசு.
இவர் ஆடியதெல்லாம் அருமை. அவுட்டானது soft/ cheep.
கில் மெல்போர்னிலியே நம் கவனம் ஈர்த்தார். இங்கு - ஸ்டம்பில், காலில், லெங்த், ஸ்விங் எல்லா வீச்சையும் நன்கு ஆடுகிறார். ஆனால், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே போகும் பந்தில்தான் அவர் வல்னரபிள். அதை அனுபவத்தால் சீர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இளவயதுதானே.
இரண்டாவது இன்னிங்ஸில், கில் கிளாசிக். அவருடைய brisk 90 அணி ஸ்கோருக்கு அடித்தளாமாக அமைந்தது.
புஜாரா அடுத்த சுவராக உருவாகிறாரா.. அவருடைய ரோல் மிகவும் வைட்டலாக அமைந்தது.
அகர்வால் கூட நன்கு ஆடிவந்தவர், ரோகித் போல தூக்கிக் கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் ஷர்துல் வாஷிங்டன் இருவரும் அழகாக ஆடினார்கள். Fours sixes என்று அதிரடி காட்டி, 100+ கூட்டணியில் பற்றாக்குறை முப்பது அளவில் இருக்குமாறு கொண்டுவந்தது விசேஷம்.
வா. சுந்தரை TNPL'லிலேயே பார்த்திருக்கிறேன். ஓப்பனிங் அனாயாசமாக ஆடுகிறவர். இரண்டாவது இன்னிங்ஸிலும் பண்ட்'டோடு 50+ கூட்டு.
இறுதியாக, நாயகன் பண்ட். Fearless cricket.
எனக்கு அவருடைய கீப்பிங் போதாது என்று குறை உண்டு.
அது கூட 2nd இன்னிங்ஸில் எதுவும் விடவில்லை.
லெக் ட்ராப்பில், (Wade)வேடைப் பிடித்தது, ஜம்ப் செய்து பெய்னைப் பிடித்து அவுட்டாக்கியது இரண்டையும் குறிப்பிடலாம்.
இறுதியில் மட்டை பிடித்து பொறுப்பாக ஆடினார். ஷாட் செலக்ஷன் ஜுடீஷியஸ். அடிக்கிற பந்து கிடைத்தால் தயவு காட்டவில்லை. ஆஃப் ஸைடில் வரிசையாக பீல்டர்களை நிறுத்திய போதும், தடுப்புகளைத் துளைத்து ஸ்கோர் பண்ணினார். அபாரம்.
வீச்சாளர்கள் ஸைனி தவிர்த்து அனைவரும் பங்களித்தனர்.
குறிப்பாக, ஷர்துல் அதிக விக்கெட் வீழ்த்தினார். அவர் ஸ்லோ, knuckle பந்து வீசி ஏமாற வைத்தார் எனலாம்.
சுந்தரின் இரண்டு விக்கெட்டுகள் சிறப்பு. வலப்பக்கமே போட்டுக்கொண்டிருந்தவர் ஒரு பந்தை லெக்கில் போட்டு ஸ்மித்துக்கு ஸர்ப்ரைசாக அமைந்து, ஷார்ட் மிட் ஆனில் ரோகித்தின் கேட்சில் முதல் விக்கெட் எடுத்தார்.
கேமரூன் கிரீனுக்கு ஒரு மாயப் பந்து. ஸ்பின் ஆகிற இல்யூஷனில் அவர் ஆடப் போக,பந்து நேரகப் போய் நடு ஸ்டம்பைப் பதம் பார்த்தது.
இறுதியாக, சிராஜ். அனுபவமில்லாமல் இறங்கி, ஆஸ்திரேலிய 2nd இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் அள்ளினார். மித வேகத்தில், நல்ல ஸ்விங் செய்தார். வார்னரை முதல் பகுதியில் எளிதில் வீழ்த்தினார்.
தந்தையை இழந்து, இறுதி அஞ்சலி செய்யக் கூட போகாமல், அணியோடு தங்கி அர்ப்பணிப்போடு ஆடினார்.
களத்தில், யங் லெக்ஸ் சுறுசுறுப்பு. நல்ல ஓட்டம். தவறு ஒன்றும் செய்யவில்லை.
மொத்தத்தில், ரஹானே தலைமையில், அனுபவமில்லாத இளம் அணி, முழு பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேனில், ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு வீழ்த்தி சாதனை புரிந்து, தொடர் வெற்றியையும் ஈட்டியது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை நம் வசமே.
பிரபல விமர்சகர்
வெ.பெருமாள்சாமி
Comments