அமெரிக்கா செல்ல ரஜினி திட்டம்?

 

அமெரிக்கா செல்ல ரஜினி திட்டம்?

உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள இன்னும் சில தினங்களில் செல்லவுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகே அவர் இந்தியா வருவார் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன
. ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் தனது பட ரிலீஸுக்கு பிறகு அப்படியே விட்டுவிடுவார் என்பது பரவலாக பேசப்படும் ஒன்று. ஆனால் இந்த முறை அவர் அரசியலுக்கு வருவதாக தீர்க்கமாக அறிவித்திருந்தார். இதனிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அரசியலுக்கு வர போவதில்லை என அறிவித்துவிட்டார்


சில அரசியல் கட்சிகள் ரஜினியின் இந்த முடிவை தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் பாஜக முந்திக் கொள்ள பார்ப்பதாகவே கூறப்படுகிறது. ஆம், வரும் 14-ஆம் தேதி இரண்டாவது முறையாக சென்னைக்கு வருகிறார் அமித்ஷா.

lஅப்போது அவர் ரஜினிகாந்தை நிச்சயம் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போன முறையே ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அது நடக்காமல் போனது. இந்த முறை நிச்சயம் அவரை சந்தித்து ஒன்று அவரை அரசியலுக்கு வர அழைப்பது இல்லாவிட்டால் தங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுக்க கோருவது என அமித்ஷா முடிவு எடுத்துள்ளாராம்.

அமித்ஷா சென்னை வருவதை அறிந்த ரஜினிகாந்த், வந்தால் தனது உடல்நலம் குறித்து விசாரிக்க வருவதாக கூறி அமித்ஷா அரசியல் பேச வாய்ப்புள்ளது என ரஜினி கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் அமித்ஷா வருவதற்கு முன்னால் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல ரஜினி முடிவு எடுத்திருக்கிறார்.
பொங்கலுக்கு முன்னர் அமெரிக்கா செல்லும் அவர் சிகிச்சை முடிந்தாலும் சில மாதங்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுக்கலாம் என தெரிகிறது. எப்படியும் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களாக சென்று சந்திப்பார்கள். ஆதரவு கேட்பார்கள் என்பதால் இந்த முடிவாம்.
மேலும் பிரச்சாரம் முடிந்த பின்னர் ரஜினியை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாய்ஸ் கொடுக்க ரஜினியிடம் கோரிக்கை வைப்பேன் என கமல்ஹாசன் வேறு கூறியுள்ளார். எதற்கு இந்த தர்மசங்கடங்கள்? அதனால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு தேர்தல் முடிந்தவுடனே இந்தியாவுக்கு வரலாம் என யோசித்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி