கபில் தேவ்

 கபில் தேவ் பிறந்த தினம் இன்று ஜனவரி 6




1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.
ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,