கைமட்டும் சதை போட்டால்
கைமட்டும் சதை போட்டால்
பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக,30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
கைகளில் இருக்கிற அதீத தசையை குறைக்க எளிய வழி!
உடல் எடை குறைக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைந்தால் இன்னொரு பக்கம், இடுப்புத் தசையை மட்டும் குறைத்தால் போதும்,தொப்பையை குறைத்தால் போதும், கைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் தசையை குறைக்க வேண்டும் என்று தனித்தனியாக சொல்வார்கள். இதற்கு, நாம் டயட் முறைகளை பின்பற்றினாலும் நடைபயிற்சி உடற்பயிற்சிகள் மிகவும் அவசியமானதாகும்.
சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு, எட்டு டம்ப்ளரிலிருந்து 12 டம்பளர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
கொழுப்பு உணவுகளை முடிந்த வரையில் தவிர்த்து புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது போக துரித உணவுகள், செயற்கை பானங்கள் போன்றவற்றையும் நீங்கள் தொடவே கூடாது.
நீண்ட நேரம் உட்காரக்கூடாது
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வகையிலான வேலை தான் எல்லாருக்கும் அமைந்திருக்கிறது, இதனால் உடல் இயக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் கணினியில் தட்டச்சு செய்து கொண்டேயிருப்பது வாடிக்கை. அதனால் கைகள் கீழ் நோக்கியே இருக்கும் இதனால் கை தசைகள் வலுவிழக்கும், தொங்கு சதை உருவாகும்.ர இதனால் அடிக்கடி கைகளை நீட்டி மடக்கி ஸ்ட்ரெட்ச் - Stretch செய்து கொள்ளுங்கள்.
புஷ் அப் - தண்டால்
இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும். ஆரம்பத்தில் அதாவது புஷ் அப் செய்ய முடியாதவர்கள் முட்டியை தரையில் படுமாறு வைத்துக் கொண்டு ஆரம்பத்தில் செய்யுங்கள். பழகப்பழக உங்கள் முழு எடையையும் கைகளிலும் கால் விரல்களிலும் தாங்கிக் கொள்வீர்கள். இந்த பயிற்சியின் போது உங்களது முழு உடல் எடையையும் உங்கள் கை தான் தாங்குகிறது. இதனால் கைகள் வலுவடையும் கைகளில் இருக்கக்கூடிய கொழுப்பு கரையும்.
கைகளுக்கு பயிற்சி
பயிற்சி 1
நேராக நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் இரண்டு பாதங்களுக்கு நடுவில் சின்ன இடைவேளி இருக்கட்டும். இரண்டு கைகளையும் அகல விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் கடிகாரச்சுற்று முறையில் சுற்றுங்கள். அப்படி சுற்றும் போது உள்ளங்கையை மூடிக் கொள்ளுங்கள். முதல் பத்து ரவுண்ட் ஒரு பக்கமும் அடுத்த பத்து ரவுண்ட் அதற்கு எதிர் கடிகாரச்சுற்று முறையில் சுற்றுங்கள்.
பயிற்சி 2
இப்போது கால்களை சற்று அகல விரித்து நில்லுங்கள். முந்தைய பயிற்சியில் பக்கவாட்டில் கையை நீட்டினீர்கள் அல்லவா இப்போது இரண்டு கைகளையும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். அப்படியே ஒரு முறை பக்கவாட்டிற்கு கொண்டு வந்து பின் மறுபடியும் உங்கள் முன்னால் நீட்ட வேண்டும். இப்படி பத்து முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 3
இப்போது முந்தைய பயிற்சிபடி பக்கவாட்டில் கையை நீட்டி இரண்டு கைகளையும் மடக்கி உங்கள் தோள்ப்பட்டையை தொட்டு மீண்டும் நீட்ட வேண்டும், இந்த பயிற்சியை பத்து முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 4
இது மிகவும் எளிதானது. நின்று கொண்டு வணக்கம் சொல்ல வேண்டும், வணக்கம் தானே இரு கரத்தையும் கூப்பி அழகாக சொல்லலாமே என்று நினைக்காதீர்கள்.
நேராக நின்று, இரு கரங்களையும் கூப்பி அப்படியே உங்கள் தலைக்குப் பின்னால் முதுகுப்பக்கம் வணக்கத்தை சொல்ல வேண்டும். இதன் போது உள்ளங்கை இரண்டும் சேர்ந்தே தான் இருக்க வேண்டும்
இப்படி கைகளுக்கான பயிற்சியை நீங்கள் தேர்வு செய்து தினம் பண்ண கை சதை குறையும்.
உடலில் தேவையில்லாத சதை குறைய வைத்தியம்
• வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.
• பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.
• இலவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
• பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.
• பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
• நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.
உணவு முறை
உடையில் கவனம் செலுத்துவதைப் போலவே உடலின் இளமை, வடிவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியம். உடல் புத்துணர்ச்சிக்கு டீ, காபிக்கு பதிலாக நேரம் கிடைக்கும் போது, ஒரு நாளில் ஒரு முறையாவது பிரஷ் ஜூஸ் குடிக்கலாம். பச்சை காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்ப்பது முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட சாலட், சூப் ஆகியவையும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்துக் கொள்ள நீர்க்காய்கள் அதிகம் சாப்பிட வேண்டும். புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், பூசணி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் எண்ணெய், உப்பு அளவைக் குறைப்பது மிகவும் அவசியம்.
கடலை எண்ணெய் அல்லது ரீபைண்டு ஆயில் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயில் ஆகிய மூன்றையும் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து உணவில் பயன்படுத்தலாம்.
வெந்தயத்தை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படும்.
பீட்சா, பர்கர், காபி, சாக்லெட் உள்ளிட்ட உணவு வகைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும். மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் போது கெட்ட கொழுப்பு உடலில் படியும்.
நார்ச்சத்து உள்ள அவரை, வெண்டை, வாழைப்பூ, வாழைத்தண்டு, புதினா, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதை தடுத்து எடை படிப்படியாக குறையு
Comments