சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது

 வாழ்க்கையில் விருதுகளையே ஏற்றுக் கொள்ளாத சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது



கோவையின் அன்னமிட்ட கை என்று போற்றப்பட்ட சாந்தி கியர்ஸ் நிறுவனம் பி.சுப்ரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியம் தன்னை சமூக நலப்பணிகளிலும் சுப்ரமணியம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். கடந்த 1996 ஆம் ஆண்டு தன் மனைவி சாந்தியின் பெயரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கினார். கோவை சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் உணவகம் புகழ் பெற்றது. தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் வகையில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. மதிய சாப்பாடு 10 ரூபாய், டிபன் வகைகள் வெறும் 5 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? மாதம் முழுக்க சாப்பிட்டாலும் 1,000 ரூபாயைத் தாண்டாது. சுத்தத்திலும் சுகாதாரத்திலும் உயர்தர ஹோட்டல்களையே தோற்கடித்து விடுமளவுக்கு இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் பங்கில் பெட்ரோல் அடித்தால் ஒரு சொட்டு கூட குறையாது. மருத்துவப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து கொண்ட சாந்தி சோசியல் சர்வீஸ் மருத்துவமனையையும் நடத்துகிறது. மருத்துவமனையில் கட்டணம் ரூ.30 தான். ஏழைகளுக்கு குறைந்த விலையில், அதாவது 30 சதவிகிதம் குறைத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது. இப்படி, பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வந்த சுப்ரமணியம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மறைந்தார். இந்த நிலையில் , மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தன் வாழ்நாளில் எந்த ஒரு விருதையும் சுப்ரமணியம் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், அவரின் மறைவுக்கு பிறகு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,