பப்பாளி இலைச்சாறு

 பப்பாளி இலைச்சாறு குடித்தால் சர்க்கரை நோயைக்  கட்டுப் படுத்தலாமா?




பப்பாளி இயற்கையாகவே பல நன்மை நிறைந்த ஒரு பழம் ஆகவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு அமிர்தமாகவும் இருப்பதா சொல்றாங்க. இயற்கை தந்த மரம் நமக்கு ஒரு வரம் அப்படினும், முழு தாவரமும் பல மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கு அப்படிங்கிறதும் ஒரு நிரூபணமான உண்மையென்றே சொல்லலாம்.


பப்பாளியை பொறுத்தவரை அதன் பழம் மட்டுமல்லாமல் இலையும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தது.


மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சதைப்பற்றுள்ள பழத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதைப் போலவே, பச்சை பப்பாளி இலை வைட்டமின் A, C, E, K, B ஆகியவற்றுக்கான களஞ்சியமாக இருக்கிறது, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சோடியம் ஆகிய தாதுக்களுடன், பபைன், சைமோபபைன் போன்ற நொதிகளுடன்; கார்பைன் போன்ற ஆல்கலாய்டு கலவைகளும் உள்ளது.



இயற்கையாகவே, பப்பாளி இலை பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. அதன் சாறு பல அதிசயங்களைச் செய்யக்கூடியது. உங்களுக்காக பப்பாளி இலை சாற்றின் சில அசாதாரண ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடுவோம்:


1. டெங்குவுக்கு சிறந்த மருந்து:


நம் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையில் அதிகளவு குறைவை ஏற்படுத்தும் டெங்கு நோய்க்கு பப்பாளி இலை சாறுடன் அற்புதமாக சிகிச்சையளிக்கலாம். 25 மிலி பப்பாளி இலை சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து குடித்தால் டெங்குவை எதிர்த்து போராடுவதற்கான ஆற்றல் கிடைக்கும்.


2. கல்லீரலுக்கு நன்மை தரும்:


பப்பாளி இலை சாறுடன் உங்கள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும். சாற்றின் குணப்படுத்தும் பண்புகள் நாள்பட்ட கல்லீரல் நோய்களிலிருந்து ஒருவரைக் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. அதாவது மஞ்சள் காமாலை, கல்லீரல் சிரோசிஸ்; புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து போராட உதவும். இது இயற்கையாகவே கல்லீரலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது, மேலும் கல்லீரலில் இருந்து நச்சுகளை சுத்தப்படுத்துகிறது.


3. சருமம், கூந்தலை மேம்படுத்துகிறது:


பப்பாளி சாறு உங்கள் உடலின் வறண்ட, மெல்லிய சருமத்தை கவனித்துக் கொள்ளும். இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, முகப்பருக்களைக் குறைக்கிறது; அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் தடுக்கிறது. மேலும் முடி வளர்ச்சியில் உதவுகிறது,


4. மலேரியாவை குணப்படுத்துகிறது:


இலையின் சாற்றில் அசிட்டோகோனின் கலவை உள்ளது, இது மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க திறம்பட செயல்படுகிறது. இதன் பிளாஸ்மோடியாஸ்டேடிக் பண்புகள் மலேரியா காய்ச்சலை மறைமுகமாக நிர்வகிக்கின்றன.


5. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது:


பப்பாளி இலை சாற்றின் மருத்துவ பண்பு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது, சிறுநீரக பாதிப்பைத் தடுக்கிறது. அதன் நொதிகள் வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்கின்றன.


இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பப்பாளி இலை சாற்றை அமிர்தம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,