முகமாற்றம் செய்து புது வருட வாழ்த்து தெரிவித்த வார்னர்

 ரஜினிகாந்த் போல் வீடியோவில் முகமாற்றம் செய்து புது வருட வாழ்த்து தெரிவித்த வார்னர்



இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இவற்றில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், வருகிற 4ந்தேதி 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மெல்போர்ன் நகரில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் பயிற்சி மேற்கொள்கின்றனர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த போட்டியில், காயத்தில் இருந்து மீண்டுள்ள டேவிட் வார்னர் விளையாட உள்ளார்.  இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் வார்னருக்கு காயம் ஏற்பட்டது.  அதற்கு சிகிச்சை பெற்ற நிலையில், அவர் 100 சதவீதம் அளவுக்கு முழுமையாக விளையாடும் தகுதியை பெறவில்லை.  எனினும் வார்னர் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறினார்.

ஐ.பி.எல். போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வார்னர், தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் முகத்திற்கு பதிலாக ரீபேஸ் என்ற செயலியின் உதவியுடன், தனது முகம் இடம்பெறும்படி செய்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.  அதில், மக்கள் பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க புது வருட வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார்.

இதற்கு முன் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சூப்பர்மேன் மற்றும் ஹல்க் உள்ளிட்டோர் போன்றும் முகங்களை உருமாற்றம் செய்து வீடியோக்களை வார்னர் வெளியிட்டு உள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,