மாஸ்டர் ---திரைப்பட விமர்சனம்

 மாஸ்டர்

- -

திருமதி சாந்தி ராஜ் ஆஸ்திரேலியாவில் இருக்காங்க.அவங்களுடைய எழுத்துகள் வித்யாசமாக இருக்கும். அவங்க பார்வையில் மாஸ்டர் எப்படினு சொல்றாங்க .பாருங்க









ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் வெளிப்படுத்த முடியாத ஒரு ஹீரோயிசம் அடங்கி போயி கிடக்கும். நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை திரையில் சினிமாவாக காட்டும் போது தானே நடிப்பதை போன்ற மனோபாவம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் தோன்றும். அதான் ஒரு திரைப்படத்தின் வெற்றி குறிப்பாக ஆக்‌ஷன் படங்கள் இந்த வகையில் தான் எடுக்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் சமுதாயத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் என்னும் எண்ணமும் சமுதாய சீர்கேட்டை தட்டி கேட்க முடியாத ஆதங்கமும் அநியாயத்தை தட்டி கேட்க முடியாத கையாலாகத்தனமும் திரையில் அப்படி ஒரு கதையில் காட்சியாக விஸ்தரிக்கும் போது அதை எல்லாம் ஒரு தனி மனிதன் அடக்கி சரி செய்வதாக காட்டு போது விசில் அடித்து உற்சாகம் காட்டுவது ஏன்? அங்கே ஒவ்வொருவனும் தானே அந்த ஹீரோவாக நினைப்பதால் தான். இல்லாவிட்டால் ஒத்தையாள் பத்து பேரை அடித்து நொருக்குவதை இந்த சமுதாயம் ஏற்று கொண்டிருக்குமா?
இப்ப மேட்டருக்கு வருவோம் வழக்கமான விஜய் படம் போல் அல்லாமல் முழுக்க முழுக்க இரண்டு பேரை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். கதாநாயகியே தேவைப்படாத படம் இதுவரை விஜய் நடித்த படத்தில் வராத புதுமை. நோ லவ், டூயட், சோலோ என எந்த தேவையில்லாத காட்சிகளும் இல்லாத படம். ஐட்டம் சாங் பார்த்து ரகசியமாக விசில் அடிச்ச கூட்டத்துக்கு அதனால் தான் மாஸ்டர் படம்.... போர் அடிச்சு இருக்கு.
முன் பாதி மாஸ் அடுத்த பாதி டர் நு பதிவு பார்த்தேன் இடைவேளைக்கு பிறகு தானே கதையே ஆரம்பிக்குது.. எதை வச்சு முன் பகுதி மாஸ்னு சொன்னாங்களோ தெரியலை.
விஜய் சேதுபதி & விஜய் போட்டி போட்டுட்டு நடிச்சு இருக்காங்க. விஜய் ஸ்டைல் & கெத்துனா சேதுபதி அசால்ட் கெத்து. டயலாக் எல்லாம் செம்ம. அதை புரிஞ்சுக்க தான் ஆள் இல்லை
. ஸ்டூடண்ட் எலெக்சன்ல சும்மா அடுத்தவனை குற்றம் சொல்லிட்டு இருக்காம நீ என்ன செய்ய போறனு சொல்லி ஓட்டுக்கேளு என்னும் வசனம் இன்றைய சூழலுக்கு பொருத்தம். இந்த காலத்துக்கு தேவையான பல வசனங்கள்... ஆனா யாருக்கும் கேட்க தான் காது இல்லை போல
இந்த சினிமாவை பார்த்து 9 கொலை பண்ணினேன்னு ஒருத்தன் சொன்னான் அந்த படம் 100 நாட்கள் தாண்டி ஓடிச்சு திருந்துங்கடா ஒருத்தன் படம் எடுக்கறான் முதல் காட்சியிலேயே தூங்குறாப்புல மீம் போடுறீங்க என்ன தான் எதிர்பார்க்கறீங்கனு சொல்லிட்டா இனி வருங்காலத்துல அதே மாதிரி படம் எடுப்பாங்க. பார்த்துட்டு உச்சுக்கொட்டிட்டு போகலாம்.
வித்தியாசமான விஜய் & சேதுபதி படம். நேரம் போனதே தெரியாத மாதிரி விறுவிறுப்பான படம் என்னை பொறுத்த வரை


.நியூ சௌத் வேல்ஸ்(ஆஸ்திரேலியா)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி