இந்தியா-பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது
இந்தியா-பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.: 256 பயணிகளுடன் முதல் விமானம் டெல்லி வந்தது
டெல்லி: இந்தியா-பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. உருமாறிய கொரோனா பரவியதை அடுத்து இந்தியா-பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து கடந்த 23ம் தேதி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்தில் உருமாறிய புதியவகை கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அங்கு லாக் டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா-பிரிட்டன் இடையே இன்று முதல் விமானச் சேவை தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் டெல்லியிலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. மேலும் ஒரு விமானம் மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது. இதவுடன் இந்தியா வரும் பயணிகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. விமானத்தின் மூலம் இந்தியா வருபவர்களுக்கு கட்டண ஆர்டி. பிசிஆர் சோதனைகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். ஆர்.டி. பிசிஆர் சோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
மேலும் பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக பயணிகள் சுய விவர படிவத்தைப் பூர்த்தி செய்து அதிகாரிகளிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்தச் சோதனையில் நெகட்டிவ் என்று வந்து அதனை சமர்ப்பிக்க வேண்டும். விமான நிலையத்தில் கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். இவர்களது கொரோனா பாசிட்டிவ் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என மத்திய அரசு கூறியது.
அதன்படி இந்தியா-பிரிட்டன் இடையே விமான போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. லண்டனில் இருந்து 256 பயணிகளுடன் முதல் விமானம் டெல்லிக்கு வந்துள்ளது.
Comments