பூஜைசெய்வதற்கானசில_குறிப்புகள் !

 பூஜைசெய்வதற்கானசில_குறிப்புகள் !!🙏 பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் போதும், பலி போடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சத்தத்தோடு செய்யப்படும் பூஜை நல்ல பலன் தரும்.


🙏 கோவில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ள கூடாது.


🙏 பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களை சேர்க்க கூடாது.


🙏 பூஜைக்குரிய பழங்கள், நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை. 


🙏 செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.


🙏 மலர்களை கிள்ளி பூஜிக்க கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே பூஜிக்க வேண்டும்.


🙏 முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும் இவை சிவ பூஜைக்கு ஏற்றவை.


🙏 துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழு நீர், மரிக்கொழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணு க்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.


🙏 குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.


🙏 பூஜைக்கு உபயோகிக்கக்கூடாத மலர்கள் வாசனை இல்லாதது, முடி, புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், தகாதவர்களால் தொடப்பட்டவை, நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள்.


🙏 தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றே பூஜை செய்தல் வேண்டிய விதி இல்லை.


🙏 ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.


🙏 மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.


🙏 துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.


🙏 பவள மல்லி சரஸ்வதிக்கு ஆகாது.


🙏 தும்பை லட்சுமிக்கு ஆகாது.


🙏 அருகம்புல் அம்பிகைக்கு ஆகாது.


🙏 விஷ்ணுக்கு துளசி மாலை உகந்தது.


🙏 சிவனுக்கு தாழம்பூ ஆகாது.


🙏 விநாயகருக்கு துளசி ஆகாது.


🙏 ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்திற்கு மஹாதீபம் அல்லது மஹா நீராஜனம் என்று பெயர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,