என்னவொரு அசாத்திய பயணம்...
என்னவொரு அசாத்திய பயணம்...
1961ல் பொம்மை படத்தில் பாடியபோது இவரின் குரலை யாரும் கண்டுகொள்ளவில்லை..1964ல் காதலிக்க நேரமில்லை என்ற பிளாக் பஸ்டரில் பாடியபோதும் சரி, பறக்கும்பாவையில் சந்திரபாபுவுக்காக பாடியபோதும் சரி.. என்ன துரதிஷ்டமோ, ஏறுமுகமே இல்லை..
ஆனால் எழுபதுகள் கைவிடவில்லை. உலகம் சுற்றும் வாலிபனின்,, தங்கக்தோணியிலே, உரிமைக்குரலின் விழியே கதை எழுது..டாக்டர் சிவாவின் மலரே குறிஞ்சி மலரே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ரெக்கார்டுகளிலும் ரேடியோக்களிலும் ஒலிக்க நிலைமையே மாறிப்போனது.
எம்ஜிஆருக்காக பாடிய அத்தனை பாடல்களும் செம ஹிட்டாக அமைந்தன.. இன்னொரு பக்கம் ஹிந்தியில் சிட்சோர் படத்தின் பாடல்கள் தேசம் முழுவதும் காதுகளை இவர் வசம் கொடுத்துவிட்டதால் இந்தி திரையுலகிலும் கொஞ்சம் சாம்ராஜ்யம் விரிந்தது.
முள்ளும் மலரும் படத்தின் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல், அந்தமான் காதலியின், நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் பாடல் போன்றவை இன்னும் ஒரு படிமேலே கொண்டுபோய்விட்டது.
70களின் பிரபலமாகாத படங்களில் இவரில் பாடல்கள் மட்டும் தனியாக பேசவைத்து மாஜிக் செய்தன..
உன்னிடம் மயங்குகிறேன்....
தானே தனக்குள் ரசிக்கின்றாள்,..
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்.. காஞ்சிப்படுத்தி கஸ்தூரி பொட்டு வெச்சி..
தேன்சிந்துதே வானம், பேரும் புகழும், யாருக்கும் வெட்கமில்லை, வயசுப்பொண்ணு என மேற்படி பாடல்க ளின் படங்களை சொன்னால் பலருக்கும் தெரியாது..இதுபோல எவ்வளவு படங்களில் எவ்வளவு பாடல்கள்..
ரஜினி, கமல் படங்களில் பாட ஆரம்பித்தபிறகு பிந்தைய தலைமுறையை ஆட்டிப்படைக்கவே செய்தார்.
வெள்ளைப்புறா ஒன்று...ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் போன்ற சோக ராகங்கள் 80களில் தமிழ் ரசிகர்களின் சுய பச்சாதாபத்துக்கு நன்றாகவே தீனிபோட்டன.
பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடிய இந்த கிறிஸ்துவனின் குரல்தான் குருவாயூரப்பனுக்கும் ஐயப்பனுக்கும் பாடல் டிரேட் மார்க்காய் இன்றளவும் இருந்துவருகிறது..
ஏழு முறை தேசிய விருதுபெற்ற கே.ஜே.யேசுதாசுக்கு இன்று 81 வது பிறந்தநாள்
Comments