இதே பிப்ரவரி 19 ,( 1915) கோபால கிருஷ்ண கோகலே நினைவு நாள்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார். கோகலே 1915 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார். கோகலே இங்கிலாந்து பயணத்தின்போது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.
2Prabhala Subash and 1 other
Comments