சேலத்தைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ் (23) அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை
இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ் (23) அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அகில இந்திய பட்டய கணக்காளர் தேர்வு கடந்த 2020 நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஏ.இசக்கிராஜ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.
Comments