கும்பகோணம் மகாமகத்தில் குளிக்க வந்த 48 பக்தர்கள் பலியான தினம்

 இதே பிப்ரவரி 18, 1992


















கும்பகோணம் மகாமகத்தில் குளிக்க வந்த 48 பக்தர்கள் பலியான தினம் இன்று
1992ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரின் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தீர்கள் என்றால், உங்களது எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்” என்று.
பிப்ரவரி 18, 1992. ஜெயலலிதா கும்பகோணம் வருகிறார். அந்த நகரமே அல்லோலப் பட்டது. எப்போதுமே மகாமகம் என்றால், அந்த சிறு நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதில் முதல்வரும் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா என்ன...? கட்சிக்காரர்கள், பக்தர்கள், காவலர்கள் என அந்த ஊரே குளம் பக்கம் கூடி விட்டது.. அவருக்காக மேற்குக்கரையில் குண்டு துளைக்காத கண்ணாடியிலான குளியல் அறை தயாராக இருந்தது. அங்கு ஜெயலலிதா அமர, சசிகலா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடக்குக்கரையில் இருந்த தர்மசாலாவின் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது. சரியாக அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் நீராடிவிட்டுக் கிளம்பினார். அவருடன் பெரும் கூட்டம் கிளம்பவே நெரிசல் மேலும் மேலும் அதிகமாகியது... அந்த நெரிசலில் சிக்கி மிதிபட்டு 48 பக்தர்கள் இறந்தனர்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,