ரணமமகரிஷி (50)

 ரணமமகரிஷி (50) 

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :50




 உயிர்களிடத்து அன்பு வேண்டும். இந்த உண்மையைத் தானறிதல் வேண்டும்.


 ஸ்கந்தாஸ்ரமத்தில் பகவான் இருந்தபோது, வண்ண மயில் ஒன்று பறந்து வந்து இங்கும் அங்குமாக விளையாடும். சில சமயம் அந்த மயில் தோகை விரித்து ஆடும்.


 அதே சமயம் அந்த ஆசிரமத்தில்,  புதர்கள் அடங்கிய காட்டுப்பகுதியில் இருந்து ஒரு கரு நாகப்பாம்பு வந்து ஆஸ்ரமத்துக்கு எதிரில் வந்து  படம் எடுத்து ஆடும். இதனையும் கண்டு பகவான் ஸ்ரீரமணர் ரசிப்பதுண்டு.



  ஒரு நாள் இரண்டும் ஒன்றாக வந்துவிட்டது


 இரண்டும் இயல்பான எதிரிகள் போராடத் துவங்கிவிட்டன.


 பகவான் ஸ்ரீ ரமணர் பாம்புக்கு அருகில் வந்து  நீ ஏன் இங்கே இப்போது வந்தாய்? அந்த மயில் உன்னை கொன்றுவிடும் உடனே இந்த இடத்தை விட்டு செல்வது உனக்கு நல்லது என்று உரைத்தார். சிறிது நேரத்திற்குள் நாகப் பாம்பு தலையைத் தாழ்த்தி அங்கிருந்து சென்றது.

  வண்ண மயிலும் பறந்து போனது.


 ஆசிரமத்தில் ஆரம்ப நாட்களில் சிறுத்தைப் புலிகளும் அக்காலத்தில் இருந்துள்ளன.



 ஆனாலும் அவர்கள் ஆசிரமத்திற்கு வருவது கிடையாது. என்றாலும் சில சமயம் பகவான் செல்லுமிடத்தில் அந்த சிறுத்தை பார்த்து இருக்கிறார். ஆனால் அதை கண்டு பயப்படவில்லை.



 ஒருநாள் நிலவொளியில் சில பக்தர்கள் வேதங்களை ஓதிய படி அருணாசல மலையை சுற்றி வந்து கிரிவலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு சிறுத்தை சற்று தொலைவில் வந்து நின்றது. வேதங்களை ஓதிய பக்தர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். அங்கு சிறுத்தை நீண்ட நேர கூர்ந்து கவனித்தது பிறகு பாடல்கள் அப்போது பாடாததால் காட்டுக்குச் சென்றது


 இந்த நிகழ்வுப் பற்றி பகவான் அறிந்த பின்னர், அந்த சிறுத்தை பற்றி யாரும் பயப்பட வேண்டாம்.  உண்மையில் அது ஒரு ஞானி.  உங்களின் வேதங்களைப் பாடும்போது கேட்க வந்துள்ளது.  அது வந்த பிறகு நீங்கள் பாடவில்லை என்பது எனக்கும் தெரியும்.


 நீங்கள் நீண்ட நேரம் நீங்கள் பாடாததால் வேதமந்திரங்கள்  பாடலைக் கேட்க வந்ததை கேட்காமலே ஏமாந்து போய் விட்டது என்றார்.



பகவான் ஸ்ரீரமணரின் ஆசிரமத்திலே அணில்களும் இருந்துள்ளன.  மரங்கள் அதிகம் இருந்ததால் அங்கு அவைகள் தாவித் தாவி விளையாடின.  பகவான் ஸ்ரீ ரமணர் அணிலுடன் விளையாடுவார், அவர் மீதும் ஏறிச்செல்லும் சிலசமயம் துரத்தினாலும் போகாது.


 பகவான் ஸ்ரீ ரமணர் அந்த அணில் மீதும் பாசம் கொண்டிருந்தார்.



 தனது எண்ணங்களில் அன்பு  ஒன்று இருந்தால் போதும்.


 விலங்குகளிடமும்  நாம் காட்டுவது அன்பென அவர்கள் உணர்வது தெரிய வந்தால் எவ்வித பிரச்சனையும் அளிக்காமல் இருந்து கொள்ளும்.


 பிற உயிர்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பது பகவான் ஸ்ரீ ரமணரின் கோட்பாடு.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி