ரணமமகரிஷி (51)


 ரணமமகரிஷி (51) 


பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :51


 அடியார்களால் மகான் ரமணர்,ரமண மகரிஷி மற்றும் பகவான் ரமணர் என்று அழைக்கப்படும் கருணைக் கடவுள் அருள் வள்ளல் அவர்களின் அருள்நிலை மாபெரும் ஞானக்கடலே ஆகும்.


 தினமும் அடியார்கள் எல்லோருக்கும்  பார்வையால், தன்னைத் தேடி வருபவர்களுக்கு பகவான் அருளாசி செய்து வழங்குவார்.


 எளிமையாக இருக்கும் பகவான் ஸ்ரீ ரமணர் தனது ஆசிரமத்தில் போதிக்க சில போதனைகளை நாம் அறிந்து கொள்வோம்.


 மனம் அமைதி பெற முக்கியமானது  மூச்சை சீராக்குவதே  இந்த வழியை கடைபிடித்தலே மிகப் பெரும் பயனாக அமையும்.


 இறைவன் நமக்கு அளித்த கொடை கருணை என்பதே.


 இயற்கை நமக்கு அளிக்கும் கொடையை எண்ணிப்பார்த்தால், கருணை என்பது மிகச் சாதாரணமே. 


 மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு வகையான விரதம் தான், ஆனால் வாயை மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்த பயனும் இல்லை.


 சாதனைக்கு தேவை நல்லதொரு  சத்சங்கமே. கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றென்றும் தனி சக்தி உண்டு.


கடவுளை  ஒவ்வொருவரும் அவர்களுடைய  இதயத்திலே தேடினால் கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.


 கடவுள் ஒருவரே நாமெல்லாம் அவர் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.


 மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே, சாதனையின் நோக்கம் ஆகும்.


 தீமைகளைச் செய்யாதீர்கள்.  புதிய வாசனை சேர்த்துக் கொள்ளாதீர்கள் தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.


   குருவே ஈஸ்வரன் ஈஸ்வரனே குரு கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.


  தியானத்தில்  ஆன்ம தியானம் எனப்படுவது சிறந்தது.அந்த சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றி கவலை கொள்ள தேவை யில்லை. ஒவ்வொருவரும் மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளை கை கொள்ள வேண்டும்.


    உணர்வு ஒருமைப்பட தியானத்தின் போது சில ஒலிகள் கேட்கும் ஆனால் அந்த ஒலியில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


 மந்திரங்கள் இடைவிடாது சொல்வதால் மனம் மூச்சு என எல்லாம் ஒன்றே என ஆகும்


தவம் என்பது ஒருவன் தான் தன்னிலை அறிந்து கொள்ளத்தான்,  அந்த அறிதல் என்பதே மிகவும் முக்கியம்.


 மற்றவர்களிடம் பழகும் போது, அவர்கள் என்ன  பேசுகிறார் என்பதை மட்டும் கேளுங்கள். தேவை ஏற்படின் மட்டும் பேசுங்கள். பேசாமல் இருந்தாலும்   உங்கள் புன்னகைக்கும் பதில் அவருக்கு புரிய வைக்கும்.


 சில சமயம் நம்முடைய கவலைகள், பிறருக்கு தெரியப்படுத்தும் போது, தம் சுற்றங்கள் அல்லது நண்பர்களோ ஆறுதல் வார்த்தை பேசும்போது, கவலையிலிருந்து நாம் வெளியில் வரமுடியும்.  ஆனால் மிருகங்கள் தனது கவலைகளை யாரிடம்  போய் சொல்லும். அவை களும் இம்மண்ணில்  வாழ்ந்து தானே வருகின்றன.


பேசும் ஒவ்வொரு வார்த்தையும்  அன்பு கலந்த நேசிப்பாக இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மனதளவில் யாரையும் காயப்படுத்தாமல் இருக்க இது வழிவகுக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,