ரமணமகரிஷி (52)  ரமணமகரிஷி (52) 

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :52


 எல்லா உயிர்களிடத்தும் அன்பை தந்தவர் பகவான் ஸ்ரீ ரமணர்.


 அன்று காலை பகவான் ஸ்ரீ ரமணர் வழக்கம்போல், தன்னுள் தானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மௌனமே மொழியாக ஆழ்ந்திருந்தார்.


 அப்போது திருவண்ணாமலை ஊருக்குள்ளிருந்து ஒரு துக்க செய்தி வந்து சேர்ந்தது. அது இறப்பு என்பதால் துக்க செய்தி என்றுதான் சொல்ல முடியும்.


 உண்மையில் அந்த தூக்கச் செய்தியினால்  ஊருக்குள்ளே மகிழ்ச்சியே ஏற்பட்டது.


 இறந்தவர் அந்த ஊரிலேயே பெரிய சண்டியர். கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, அடிதடி  அராஜகத்துக்கு பெயர் போனவர்.  வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பலபேரை நடு ரோடு என்று கூட பார்க்காமல் திட்டித் தீர்த்தவர்.


அவரிடம் கடன் வாங்கியவர்கள், கடன் கொடுப்பதற்கு முன் பல திட்டுக்களை அவரிடம் நேரடியாக வாங்கியவர்கள். அதே சமயம் சமயத்திற்கு பணம் கொடுப்பவரும் அவரே.


 இப்படிப்பட்ட புண்ணியாத்மா மறைந்துவிட்டார் ஸ்ரீரமண மகரிஷி சலனமில்லாமல் இருந்தார்.அடுத்த நாள் அந்த சண்டியரின் பிரேதம் ஆசிரமத்தை தாண்டித்தான் செல்ல வேண்டும் நிலை.


 அவ்வாறு செல்லும் பொழுது செல்லும் போது, பகவான் ஸ்ரீ ரமணர் அந்த பிரேதம் அருகே வந்து நின்று வணங்கினார்.


 அதன்பின்னர் பகவான்  ஆசிரமத்திற்கு வந்து குளித்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.


 பகவானின் சீடர்களுக்கு இவரது செயல் வினோதம் மட்டுமல்லாமல் கவலையும் அளித்தது. அந்த சண்டியனுக்கு தாங்கள் ஏன் வணங்கி மரியாதை செய்தீர்கள்.  அவன் எவ்வளவு  நபர்களை கொடுமை செய்து இருக்கிறான். தன்னுடைய  பணத்திமிரினால் பல பேரை தனது அடியாட்களை வைத்து மிரட்டல் செய்திருக்கிறான்.


 நல்லவனாக இல்லாத அவனை  நீங்கள்  வணங்கியது சரியல்லவே என்றார்கள்.


 உங்களுக்கெல்லாம் அவனை சண்டி யனாக மட்டும் தான் தெரியும்.


 நான் முதல் முதலாக வீட்டை விட்டு வந்த போது, எனக்கு குளிக்க கூட சரிவர தெரியாது. வீட்டில் இருந்தபோது அம்மா எனது முதுகை தேய்ச்சு விடுவார்கள்.


 அந்தப் பருவத்தில்  நான் இங்கிருக்கும் குளத்தில் குளிக்கும் போது , எப்படி முதுகை தேய்த்து குளிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவன் அவன்  தான். அவனை என்னால் மறக்க முடியாது. அவன் சண்டியனாக இருந்தாலும் ஒரு மனிதனே.


 நம்முடைய மக்கள், அவசரத் தேவையென்று கடன் வாங்குகிறார்கள். கடனை திருப்பிச் செலுத்துவது முறை தானே. வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்தி விட்டால் பிரச்சினை வராதே. பின்னர் நாம் அவனுக்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என்றார்.


 பகவான் ரமணர் சொல்வதில் நியாயம் தானே என்று எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.


 அன்று  எனக்கு செய்த உபகாரத்திற்காக மட்டுமல்ல, இந்த பூமியில் பிறந்த ஒருவன்.அந்தப் பிரதேதத்தை நான் வழங்கியது தவறு ஏதும் இல்லையே என்று சொல்லி முடித்தார்.


 பகவானுடைய சீடர்கள் அதற்குமேல் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பின்னர்  அவரவர் தனது வேலையை செய்யக் கிளம்பிவிட்டனர். என்றோ,எப்போதோ தனக்கு செய்த சின்ன உபகாரத்தை செய்த  நினைவுபடுத்தி, அந்த விரதத்திற்கு உரிய மரியாதை செலுத்திய இந்த சிந்தனை யாருக்குத்தான் வரும்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் உணர்விலே அன்பு என்பது இரண்டறக் கலந்தது என்பதைத் தவிர  சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.


 பகவான் ஸ்ரீ ரமணரின் செயல், விலங்குகளிடம் அவர் வைத்திருந்த அன்பு, அவரின் நடை ஆகியவை கொண்ட ஒரிஜினல் வீடியோவையும் இன்றைய நிகழ்வில் பதிவிடுகிறேன். பகவான் ஸ்ரீரமணரை மனதில் நினைத்துக் கொண்டு பாருங்கள்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,