ரமணமகரிஷி (53)

 ரமணமகரிஷி (53)


பகவான் ஸ்ரீ ரமணர்  தொடர்: 53



 பகவான் ஸ்ரீ ரமணரின் சரீரம் சில ஆண்டுகளாகவே ஆரோக்கியம் குறைந்த நிலையில் இருந்தது.


 கீல்வாதம்(rheumatism) காரணமாக கால்கள் முடக்கப்பட்டும்,முதுகு மற்றும் தோல் பகுதிகள் பாதிப்புற்றும் அவர் காணப்பட்டார்.பிணி என்பது எச்சரிக்கை  மணி தான். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.


 அனைத்தும் அறிந்த பகவான் நமது உடம்பின் உபாதைகளை அறியாதவரா,உடம்பு வெகுவாக பலவீனமு ற்றிருப்பதையும்  அவர் அறிந்தே இருந்தார். ஆனால் அவர் அக்கறை காட்ட மறுத்து விட்டார். ஆசிரம உணவைக் காட்டிலும் சத்துள்ள உணவை அவர் உண்ண வேண்டிய கட்டாயம். எனினும் அவர் தனக்கென்று பிரத்தியேகமாக படைக்கப்பட்ட எதனையும் ஏற்க மறுத்துவிட்டார்.



 பகவான் ஸ்ரீரமணர் எழுபதில் இன்னும் காலடி வைக்க வில்லை.ஆனால் வயதை மீறிய முதுமை வந்து விட்டிருந்தது. அந்த முதுமையில் பிணிகளின் வடிவில் சுமை. அவர் சுமக்க விரும்பினாரேயன்றி  இறக்கி வைப்பதற்கு விரும்பவில்லை. நன்றாக கவனியுங்கள். பகவான் ஸ்ரீ ரமணர் அவரது வாழ்நாளில் பெரும்பகுதியை மூலிகைகள் நிறைந்த மலையில் வாழ்ந்தவர். கட்டுப்பாடாக உண்பவர். அப்படி இருக்க அவருக்கு நோய்கள் வந்தது எப்படி நரம்பு புற்று உள்பட.


இது தான் ஊழ்வினை என்பது. மனித சரீரம் எடுத்தவர் வினைகளின் பயனை அனுபவித்தே கழிக்க வேண்டும். அவர் தம் பக்தர்களுடைய வினைகளை ஏற்றார் அதைத்தான் அனுபவித்து கழிக் கலானார்.


 தம்மை நாடி வந்தோர் பிணிகளைத் தாமே தீர்த்து வைக்கிற தயாபரன் ஆயிற்றே. இவர் ஏன் தம்முடைய உடம்பின் உபாதையைத் தீர்த்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி எழும். "நான் என்பது உடம்பு அல்ல" என்று உபதேசம் செய்தால் மட்டும் போதுமா அதை உலகுக்கு உணர்த்த வேண்டாமா. அதை உணர்த்துதலும் ஒரு அங்கம்.


 பகவான் ஸ்ரீரமண இன்னும் எத்தனை காலம் இருப்பார்? தியானக் கூடத்தில் விவாதித்தார்கள். ஜோசியர் சொல்கிறார்.  எப்படியும்  எண்பது வயது இருப்பார் என்று குறிப்பிட்டார். பேச்சு பகவான் காதில் விழவே செய்தது. அவர் மௌனமாய் கேட்பார். புன்னகைப்பார். பகவான்  இது பற்றி என்ன நினைக்கிறார் குழப்பத்துடன் கேட்ட பக்தர் ஒருவர் "அவர் இது பற்றி நினைக்க றதே இல்லை என்றார் தேவராஜ முதலியார் (சீடர்களில் ஒருவர் )



பகவான் ஸ்ரீ ரமணர் அனுபவித்த வேதனைகள் எண்ணி பக்தர்கள் மனம் வருத்தமுற்றது. மரண பயம்  அவர்களை கவ்வியது. அவரோ எதைப் பற்றியும் கவலைப்படாதவராக இருந்தார்.


19 47முதல் அவரது உடல் நலம் சீர்குலைய தொடங்கியது.1949 தொடக்கத்தில் இடது முழங்கைப் பக்கம் ஒரு கட்டி தோன்றியது.அது ஒன்றும் அப்போது பெரிதாக படவில்லை. ஆசிரமத்து டாக்டர் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார். ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் தலைகாட்டியது. இப்போது முன்பைவிட பெரிதாகவும் வலி யளிப்பதாகவும் இருந்தது. சென்னையிலிருந்து வந்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தார்கள். ஆனாலும் ரணம் ஆறவில்லை.  கட்டி மீண்டும் வந்தது ரொம்ப பெரிதாக.


 ஆசிரம தோற்றத்தில் சோகம் படிந்தது. தாங்கள் அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். ஆனால் மீண்டும் கட்டி வருவதை தடுக்க முடியாது என்று டாக்டர்கள் ஒப்புக்கொண்டார்கள்ரேடியம்(Radium) சிகிச்சை செய்தனர் ஆனால் அதன் பின்விளைவுகளை சுட்டிக்காட்டவும் அவர்கள் தவறவில்லை.


 மறுமுறை கட்டி வந்த போது அந்த கையை துண்டித்து விடலாம் என்பது டாக்டர்களின் அபிப்பிராயமாக இருந்தது .ஆனால் இங்கே ஒரு தலைமுறைத் தத்துவம் உண்டு. ஞானியர் உடம்பை அங்கவீனம் செய்ய கூடாது என்பதற்காக வழக்கத்திற்கு மாறான ஒன்றை பகவான் ஏற்க மறுத்தார் .அவர் அறுவை சிகிச்சைக்கு செல்வது கூட பக்தர்கள் வேண்டுகோளுக்காகத்தான். அவர்களுடைய மனம் புண்படக் கூடாது என்பதற்காகத்தான்.


 இந்த உடம்பே ஒரு ரோகம். இயல்பா அதுக்கு என்ன நடக்கிறதோ நடக்கட்டும் விடுங்க என்று சொல்லிவிட்டார் பகவான். கட்டுப்போட மட்டும் ஒத்துக் கொண்டார்.


 நாளாவட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும் மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருந்தது அவருடைய பேச்சு.


 பகவான் விரைவில் குணம் பெற்று விடுவார் என்று பக்தர்கள் அந்த வார்த்தையை அர்த்தப்படுத்திக் கொண்டார்கள் ஆனால் எல்லாம் சரியாகிடும் என்று பகவான் சொன்னது இன்னொரு அர்த்தமும் இருந்ததை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள் நம்முடைய சரீரத்தை உதறும் நாள் அவருக்குத் தெரிந்தே  இருந்தது. அது பற்றி எந்த ஐயமும் இருக்க வில்லை.


 பகவானுக்கு உண்மையில் வலி தெரியும் இல்லையா? இதன் தொடர் நாளைய பதிவில்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,