ரமணமகரிஷி (54)

 ரமணமகரிஷி (54)


பகவான் ஸ்ரீ ரமணர்  தொடர்: 54












 பகவான் ஸ்ரீரமணர் அடுத்தவர் வலியை தன் வலியை தாங்கி இருக்கும் போதும், உடல் உபாதை ஏற்பட்ட போதும் அவருக்கு வலி தெரியவில்லையா? என ஒரு பக்தர் கேட்டார்.


''ஆம் பகவானுக்குத் தெரியும் என்று டாக்டர் சொல்கிறார்" இன்னொரு பக்தர் அப்போது ஆனால், பகவான் வலியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை என்ற வியப்பு தான் எல்லோருக்கும். டாக்டர்கள் உள்பட "மனம் என்பது இருந்தாத்தானே வலி தெரிவதற்கு 'பகவான் தன்னுடைய பணியாளர் ஒருவரிடம்  இப்படி குறிப்பிட்டார்.


" நான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறதா நீங்க நினைச்சா அது நோய் தான். நான் நல்லா இருக்கேன்னு நினைச்சா நல்லாருக்கும்" என்றார் சிரித்தபடி.



 டாக்டர்கள் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக அவர் தம்முடைய புண்ணுக்கு வைத்தியம் செய்து கொண்டார். நிலைமையில் கொஞ்சமாவது அபிவிருத்தி தெரிந்தால் போதும், சிகிச்சையை நிறுத்தச் சொல்லி விடுவார்  இப்படி பல முறைகள்.


 அந்தக் கட்டி அவர் உடம்பில் எஞ்சியிருந்த ஆற்றலை உறிஞ்சுவதாயிற்று. அவர் ரணத்தில் பலவீனப்பட்டிருந்தாலும் முகத்தில் கருணை அசாதாரண மாய் ஒளி விட்டது. முன்னைவிட அழகாய் பிரகாசித்தது. ஆனால் அந்த அழகு காண்பவர் நெஞ்சில் வலி கொடுத்தது.



 கட்டியின் வளர்ச்சி யில் கை கடுமையாய் கனத்து நெருப்பாய் எரிந்தது.


 மூன்றாவது முறையாக ஒரு அறுவை சிகிச்சை செய்தார்கள். பாதிக்கப்பட்ட திசுக்களை முற்றாக அழிக்க ரேடியம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அது இன்னொரு கட்டிக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடும் என்று நம்பப்பட்டது.


 பகவான் மருத்துவ சாலையின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டார். பக்தர்கள் தரிசித்து செல்வதற்கு வசதியாக இருந்தது. அவர் களைப்புற்ற வாராய் தெரிந்தார். ஆனால் அவருடைய முகத்தில் உபாதையின் சாயலை யாரும் காணவில்லை.



 மறு நாள் மதியம் வழக்கம்போல் தியானக் கூடத்துக்கு வந்து விட்டார். மருத்துவசாலையில் மற்ற நோயாளிகளுக்கு இடையூறாக இருந்து கொண்டிருக்க அவர் விரும்பவில்லை.


 நம்முடைய சரீர நீக்கம் நமது பக்தர்களுக்கு எத்தனை சுகத்தை அளிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். உண்மை தான்.அந்தப் பிரிவை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது தான். தமக்காக வருந்துபவர்கள்களை எண்ணி அவர் இரக்க முற்றார். பகவான் "இந்த உடம்பு அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தலானார்.


 பகவான் நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்று அவர்கள் வருந்துகிறார்கள். நான் எங்கே போவேன், எப்படிப் போவேன் இந்த உடம்பை அல்லவா பகவான் என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! என்று பல முறை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


 நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு உடம்பு கொஞ்சம் தேறினாற் போல் இருந்தது.ஆனால் நவம்பரில் அந்த கட்டி மீண்டும் வந்தது. டிசம்பரில் நாலாவது  முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லையென டாக்டர்கள் தெரிவித்து விட்டார்கள்.


 1950 ஜனவரி 5. எழுபதாவது ஜெயந்தி நடந்து முடிந்தது. இம்முறை எந்தக் கோலாகலமும் இல்லை.வந்தவர்கள் முகத்தில் குதூகலமும் இல்லை இது தான் பகவான் கடைசி பிறந்தநாள் விழாவாக இருக்குமோ என்ற கவலையில் அவர்கள் இருந்தனர். பகவான் எல்லோருக்கும் தரிசனம் அளித்தார் அவரைப் போற்றித் துதிக்கும் பல புதிய பாடல்கள் அவர் முன்னிலையில் பாடப்பட்டன கொண்டாட்டத்தில் சோகம் இழையோடியது.


 அடுத்து என்ன சிகிச்சை செய்வது? பகவானிடம் கேட்டார்கள்.நான் எப்போதாவது சிகிச்சை வேண்டும் என்றேனா. ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நடக்கிறது நடக்கும் என்றார் அவர். அதன்பிறகு ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் முயற்சிக்கப்பட்டன.


 பகவானுக்கு சாத்தியப்படாது என்கிற நிலை வரை அன்றாட காரிய கிரமங்களை அவர் கடைப்பிடித்து வந்தார். சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு எழுந்து குளித்து குறித்த நேரத்தில் தரிசனம் கொடுத்தார். கடிதப் போக்குவரத்துக்களைக் கவனித்தார். ஆசிரம  நூல் வெளியீடுகளின் அச்சிடுதலை  மேற்பார்வையிட்டார். அவ்வப்போது யோசனைகள் தெரிவித்தார்.


 காலையிலும், மாலையிலும் நூற்றுக் கணக்கில் பக்தர்கள் வந்தார்கள். அவரது முன்னிலையில் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அவர் ரொம்பவும் பலவீனப்பட்டு விட்ட நிலையில் கதவருகே நின்று பார்த்தார்கள்.


 ஒரு நாள் அவருடைய உடல்நிலை அபாயத்தை அறிவிப்பதாக இருந்தது. தரிசனம் தருவது நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு விஷயம் தனது கவனத்திற்கு வந்த போது பகவான் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பழைய நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


 பக்தர்கள் குழுவொன்று தினமும் வந்து அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து  துதிப்பாடல்கள் பாடினார்கள். பகவான் புன்னகைத்தார். "நல்ல காரியந்தான் நடக்கட்டும்".


 கட்டி ஆறாத ரணமாயிற்று. உடம்பின் முழு அமைப்புமே நச்சுத்தன்மை அடைந்தது. கடுமையான ரத்தசோகை ஏற்பட்டது. அவ்வப்போது சென்னையிலிருந்து டாக்டர்கள் வந்தனர். இறுதிவரை அவருடைய முதல் கேள்வி, அவர்கள்  சாப்பிட்டாயிற்றா? பணியாட்கள் நல்லபடி கவனித்துக் கொண்டார்களா என்பதாகத்தான் இருந்தது.


 பகவானின் நகைச்சுவை உணர்வு மட்டும் அப்படியே இருந்தது. கட்டிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கிற மாதிரி அவர் நகைச்சுவை செய்தார்.


 டி.என். கிருஷ்ணன் டாக்டர் என்பதோடு மட்டுமல்லாமல் பகவானுடைய தீவிர பக்தருமாவார்.


 அவரிடம் பகவான்  ஸ்ரீ ரமணர் "இந்த சரீரம் வாழை இலை மாதிரி. இதில் எல்லா ருசியான பண்டங்களும் பரிமாறி சாப்பிட்டாச்சு அருமையான இலைதான் ஆனால் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியத்தானே வேண்டும். நோக்கம் நிறைவேறியாச்சு. அப்புறம் என்ன? என்றார்.எத்தனை எளிமையாகச் சொல்லப்பட்ட அரிய உண்மை. யாவரும் அறிய வேண்டிய உண்மை.


 பக்தர்களில் சிலர், பகவான் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம். அவருடைய கருணை அல்லவா எங்களை வாழ வைக்கிறது என்று புலம்பினார்கள். பகவான் பதிலளித்தார். "ஆனாலும் இந்த உடம்புக்கு நீங்கள் ரொம்பத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று அவருடைய வார்த்தை,இந்த சரீரம் நசிவதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அருளோ வழிநடத்தலோ தடைபடாது". என்று உணர்த்துவதாய் இருந்தது.


 ஏப்ரல் 13, பகவானின் நுரையீரலில் ஏற்பட்டிருந்த உபாதையைக் குறைக்க டாக்டர் ஒருவர் மருந்து கொண்டு வந்திருந்தார். "தேவையில்லை இரண்டு நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று பகவான் சொல்லிவிட்டார்.


 அன்று இரவு அவர் தனது பணியாட்களை, தியானம் செய்த பின் உறங்கச் செல்லும்படி கூறி விட்டார்.


 நாளை தொடரும்.\




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,