ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்;
நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.கொரோனா காரணமாக முதன்முறையாக அச்சு வடிவில் இல்லாமல், மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ,மேலும் இந்த பட்ஜெட் முதல்முறையாக மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்படி பட்ஜெட் உரை வழக்கம் போல் புத்தக வடிவில் தயாரிக்கப்படாமல் மின்னணு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உரையை கணினி திரையை பார்த்து நிதியமைச்சர் படிக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மின்னணு திரையில் பட்ஜெட் தகவல்களை பார்த்து தெரிந்துகொள்வார்கள்.
Comments