Thursday, February 4, 2021

சக்தி ஜோதி

 

சக்தி ஜோதிதமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் சக்தி ஜோதிக்கு இன்னொரு முகமும் உண்டு... சமூகப் பணியாளர்! பெண்களின் பொருளாதார சுயசார்புக்காகவும் சூழலியல் மேம்பாட்டுக்காகவும் ‘ஸ்ரீ சக்தி டிரஸ்ட்’ என்ற நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து செயலாற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஜோதியின் பின்னால் 46 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை நிர்வகிக்கிறார்!

‘‘பொருளாதார தன்னிறைவும் சமூக அங்கீகாரமும்தான் பெண்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத்தரும் என்பது என்னோட பட்டனுபவம். ஒரு படைப்பாளியா எனக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியை விடவும் ஒரு சமூகப் பணியாளரா இன்னும் கூடுதலா இயங்க விரும்புறேன். வெளியுலக ஞானமில்லாத, அடுப்பங்கரையே உலகமாக நினைச்சுக்கிட்டு தன்னோட சுய தேவைகளைக் கூட குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து தியாகியா வாழ்ந்து கரையுற பெண்கள்தான் எனக்கு முன்மாதிரி. காலம் கற்றுத்தந்த பாடங்களும் சுயமரியாதையும் என் பாதையை வேறு திசைக்கு மாத்தியிருக்கு.
அப்பா பாண்டியன் மின்வாரியப் பொறியாளர். அம்மா சிரோன்மணி இல்லத்தரசி. அம்மா 8ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. பொதுவா பெண் பிள்ளைகள் அம்மாவைப் பாத்துதான் வளருவாங்க. அம்மா தன் வாழ்க்கை மூலமா நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்காங்க. முதன்மையானது, தன்னம்பிக்கை. மூணு சகோதரி கள். ஒரு அண்ணன். ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து உழைக்கிற அம்மா... ஒரு நொடியைக் கூட வீணாக்க மாட்டாங்க. நல்லா ஓவியம் வரைவாங்க... சித்திரத் தையல் (எம்பிராய்டரி) செய்வாங்க. எனக்கும் இதில் ஆர்வம் உண்டு.
அண்ணன் நிறைய வாசிப்பார். மெல்ல மெல்ல நானும் வாசிக்கப் பழகினேன். ஒரு கட்டத்துல வாசிப்பார்வம் எழுதவும் தூண்டுச்சு.
நானும் சக்திவேலும் சாதி மதம் கடந்து திருமணம் செஞ்சுக்கிட்டோம். காதல், குடும்பத்தில இருந்து எங்களை விலக்கி நிறுத்துச்சு. விளிம்புல இருந்து, சுயமா கரம் ஊன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலை. படிப்பு தற்காலிகமா தடைப்பட்டு நின்னுச்சு. சக்தி வளமான குடும்பத்தில பிறந்தவர். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தார். அவரோட சிரமத்துல நானும் பங்கெடுத்துக்க விரும்பினேன். தையல், அது இது என எனக்குத் தெரிஞ்ச வேலைகளை செய்யத் தொடங்கினேன்.
அம்மா கத்துக் கொடுத்த விஷயம்தான் எல்லாம். சந்தோஷமோ, துயரமோ... நமக்கு நடக்குற எல்லாத்தையும் தூர தள்ளி நின்னு வேடிக்கை பாக்கணும்... அப்போதான் அதிலயிருந்து பாடம் படிக்க முடியும். அனுபவம் நிறைய பாடங்களை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு. எவ்வளவு அழுத்தத்துக்கு இடையிலயும் வாசிக்கிறதை நிறுத்தல. அது வேறொரு வெளியில என்னை இளைப்பாற வச்சுச்சு.
எங்க ஊரில் தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள்தான் வாழ்வாதாரம். தட்டி முடையறது, விளக்குமாறு கிழிக்கிறதுதான் தொழில். ஒரு பெண் காலையில உட்கார்ந்து தட்டி பின்ன ஆரம்பிச்சா, சாயங்காலத்துக்குள்ள 150 தட்டி கூட முடைஞ்சு போட்டுடுவாங்க. ஓரளவு வருமானம் கிடைக்கும். அதனால திருமணமாகிப் போன பெண்கள் கூட வேலைக்காக திரும்பவும் தங்கள் வீட்டுக்கே வந்து தங்குற நிலையும் உண்டு.
ஒரு பயிற்சி முகாம் நடத்தி விழிப்புணர்வு ஊட்ட முடிவு செஞ்சு அதற்கான முயற்சியில இறங்குனேன். அதிலயும் தோல்வி... சோர்ந்துட்டேன். பல பேருக்கு முன்மாதிரியா இருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி உ.சகாயம் எங்களுக்கு குடும்ப நண்பர். அவர்கிட்ட இந்தச் சூழலை சொல்லி வருத்தப்பட்டேன். Ôஒரு தனியாளா நீ எதைச் செஞ்சாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போய் சேராது. ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு. அதன் மூலமா நீ செய்ய வேண்டியதைச் செய்... அப்போ எல்லாமே எளிதா இருக்கும்Õனு அவர்தான் ஆலோசனை சொன்னார். மனசுக்குள்ள புதுசா ஒரு கதவு திறந்த மாதிரி இருந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா தொண்டு நிறுவனம்னா என்னன்னு கூட அப்போ எனக்குத் தெரியாது! காந்தி கிராமம் பல்கலைக்கழகம் தந்த தகவல்களின் அடிப்படையில் படபடன்னு செயல்ல இறங்குனேன்.
சுய உதவிக்குழு திட்டம், மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டம். பெண்களை ஒருங்கிணைச்சு அவங்க சக்தியை அவங்களுக்கு உணர வைக்கிற திட்டம். வங்கிக் கடன் மாதிரி வாய்ப்புகள் இருந்தும் நிறைய பெண்களுக்கு என்ன தொழில் பண்றதுன்னு தெரியலே. தொழில் வாய்ப்புகள், கடன் வாய்ப்புகள் பற்றிதான் முதல்ல பயிற்சி கொடுத்தேன். அடுத்த கட்டமா நானே சுய உதவிக்குழுக்களை அமைக்கத் தொடங்கினேன். நிறைய பெண்கள் சுயமா தொழில் செய்ய முன்வந்தாங்க. பலபேர் முன்மாதிரி தொழில்முனைவோரா வளர்ந்தாங்க. இன்னைக்கு அது ஒரு பெரிய வலைப்பின்னலா வளர்ந்து நிக்குது.
பேட்டி: கவிஞர் சக்திஜோதி
நன்றி: குங்குமம்
May be an image of 3 people, including Sakthi Jothi and outdoors
8

No comments:

Featured Post

பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.

  பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும்  கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்  ரோஜ...