Tuesday, February 16, 2021

தாதா சாஹேப் பால்கே

 🎬தாதா சாஹேப் பால்கே காலமான நாளின்று😢
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்
தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார்.பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.
1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார். படங்கள் பெரும்பாலும் மவுனம் தான்; இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது.சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார்; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தார்.
இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை. படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள். மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது. பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள். இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார்.இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள். ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார். ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான். நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார்.பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார்; பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும்.
எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார். தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர்; பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார்.இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார். அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார். கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார். பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன; வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார்.வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார். அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம். அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது. அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது.No comments:

Featured Post

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

  73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற க...