வேல ராமமூர்த்தி
நடிகர் வேல ராமமூர்த்தி வெறும் நடிகர் மட்டுமல்ல.!
நடிகர் வேல. ராமமூர்த்தி அவர்களுக்கு இன்று 68வது பிறந்தநாள்.
வேல ராமமூர்த்தி பிரபல எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழி சொந்த ஊர் ஆகும். இவர் இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு, அஞ்சலகத்தில் பணியாற்றினார். இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் 2008ல் ஆயுதம் செய்வோம் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார்.
இதனையடுத்து, 2013ல் மத யானை கூட்டம் படத்தில் அருமையான வேடத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து கிடாரி, கொம்பன், அப்பா, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, துப்பாக்கி முனை, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ரசாயன உரம் போடாத இலைதழைகள்,இயற்க்கை உரங்கள் போட்டு வளர்ந்த சத்தான உணவுகளைச் சாப்பிட்டதாலும், ஓடி ஆடி இருந்ததாலும் எனக்கு 16 வயசுலயே திடகாத்திரமான உடம்பு அமைந்தது. நான் பி.யு.சி படிப்பு முடித்தவுடன் மிலிட்டிரி செலக்ஷனுக்குப் போனேன். என் உடம்பையும் படிப்பையும் பார்த்தவுடனே என்னை தேர்வு செய்துவிட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
இவர் குற்றப் பரம்பரை, பட்டத்து யானை, அரிய நாச்சி போன்ற மண் சார்ந்த நாவல்கள் எழுதியுள்ளார். நடிகர் வேல. ராமமூர்த்தி அவர்களுக்கு இன்று 68வது பிறந்தநாள். இந்தநிலையில், நடிகர் வேல. ராமமூர்த்தி அவர்களுக்கு ரசிகர்கள் இணையத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments