ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்

 ஆட்டோவில் தவறவிட்ட 2.3 லட்ச ரூபாய் மற்றும் தங்க செயின் ஒன்றை வீடு தேடி வந்து வழங்கிய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது...!சென்னை மணலியைச் சேர்ந்த முனியம்மா/52 என்பவர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மணலியில் இருந்து ஆட்டோவில் சென்றபோது அவர் பயணம் செய்த ஆட்டோவில் ரூ.2,30,000/- ரொக்கமாக பணம் மற்றும் 2 பவன் தங்க சங்கிலி ஒன்றையும் தவற விட்டுள்ளார்.

பணத்துடன் நகையை தவறவிட்ட பதட்டத்தில் முனியம்மா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.


இதற்கிடையில் தனது ஆட்டோவில் தவற விட்ட நகை மற்றும் பணம் வைத்துள்ள அந்த பையை கண்டு எடுத்த ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் அதை முனியம்மாவிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று முனியம்மாவின் வீட்டிற்கு சென்று தவறவிட்ட அவரது கட்டைபையை வழங்கியுள்ளார்.


ஆட்டோ ஓட்டுனர் முனியம்மா வீட்டிற்கு வந்து நகை பணத்தை வழங்கிய விவரம் அறிந்த காவல் துறையினர் முனியம்மா அளித்த புகாரை ரத்து செய்ததோடு அட்டோ ஓட்டுனர் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து பாராட்டினார்.


ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,