ஏழை பெண்ணுக்கு தாய்மாமனாக மாறி சீர் செய்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ!

 ஏழை பெண்ணுக்கு தாய்மாமனாக மாறி சீர் செய்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ!

மதுரை அவனியாபுரத்தில், ஏழை பெண்ணுக்கு தாய்மாமனாக மாறி சீர்வரிசை செய்த தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர். சரவணரைன பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த மலைச்சாமி- ஆனந்தஜோதி தம்பதிக்கு அபிராமி மற்றும் மணிகண்டன் என்று இரு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி 4 வருடங்களுக்கு முன்பு உடநல குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் மறைவுக்கு பின் மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்த பிள்ளைகள் இருவரும் பள்ளி படிப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வசதியில்லாததால், தாயாருக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, மகள் அபிராமிக்கு திருமணம் வயது எட்டினார். மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆனந்த ஜோதி திணறியுள்ளார்.
ஆனந்தஜோதியின் நிலை குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் , அபிராமிக்கு தன்னுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க முன்வந்தார். தாய்மாமன் முறையில் சீர்வரிசையும் செய்தார். இதையடுத்து, நேற்று அபிராமியின் திருமணம் நடைபெற்றது. சரவணன் எம்.எல்.ஏ திருமணத்துக்கும் வருகை தந்து முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் அவரிடத்தில் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து , மணமக்களுடன் அமர்ந்து உணவருந்திய டாக்டர். சரவணன் எம்.எல்.ஏ அங்கிருந்து மன நிறைவுடன் புறப்பட்டு சென்றார் .
நன்றி: பாலிமர் செய்திகள்
May be an image of 5 people and people standing


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,