கைகளின் வறட்சியை போக்க சில அற்புத வழிகள் !

 கைகளின் வறட்சியை போக்க சில அற்புத வழிகள் !!





* சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும்.



* ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

 


* மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.


 

* குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.


 

* கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்யை கை, கால்களுக்கு தடவி  வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,