சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள்

 பிப்ரவரி 18 , 1860 - இன்று “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படும். சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள்







💐. சிங்கர வேலர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், சென்னையில் முதன் முதலாக மே தினத்தைக் (தொழிலாளர் நாள்) கொண்டாடியவரும், இந்தியாவின் முதலாவது தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 இல் தொடங்கியவரும், சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவரும், மே 1, 1923 இல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கிவரும், 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் ஒருவரும், தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சிங்காரவேலர் தொழிலாளர்களுக்காக எழுதினார், போராடினார், என்றாலும், இந்திய தனித் தன்மைகளையும், தமிழக தனித்தன்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இதனால் தான் பெரியாரோடும், சுயமரியாதை இயக்கத்தோடும் இவரால் ஒருஙகிணைந்து செயல்பட முடிந்தது. இது தான் தமிழக பொதுவுடமை வரலாற்றில் முக்கியப் பகுதியாக இன்றுவரை கருதப்படுகிறது. மகா கவி பாரதியார் உயிர் நீத்தது சிங்காரவேலரின் மடியில்தான். இறந்த பாரதியை இடுகாட்டுக்கு இட்டுச்சென்ற பத்து பேரில் சிங்காரவேலரும் ஒருவர்.
"செங்கதிர் ஒளி போல் அறிவில் தெளிந்தவன்.
திங்களின் ஒளி போல் அன்பில் குளித்தவன் .
இது சிங்காரவேலருக்குப் பாவேந்தர் சூட்டிய பாராட்டுகளில் ஒன்று.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,