அஸ்வினுக்காக சிராஜ் செய்த காரியம்..

 செம மனுஷன்.. தமிழக மக்கள் இதை மறக்கவே மாட்டார்கள்.. அஸ்வினுக்காக சிராஜ் செய்த காரியம்.. 




சென்னை: சென்னையில் இன்று செஞ்சுரி அடித்த அஸ்வினுக்கு இளம் வீரர் சிராஜ் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவில் வைரலாகி உள்ளது.


இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்த நிலையிலும் அஸ்வின் அதிரடியாக ஆடி செஞ்சுரி எடுத்துள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


இன்று அஸ்வின் செஞ்சுரி அடிப்பதற்காக காத்து இருந்த போது சிராஜ் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். சிராஜ் நன்றாக பேட்டிங் செய்வார். ஆனாலும் கூட ரிஸ்க் எடுக்காமல் அஸ்வினுக்கு தொடர்ந்து ஸ்டிரைக் கொடுத்தார்.


அதிலும் அருகிலேயே அடித்துவிட்டு இவர் வேகமாக சிங்கிள் ஓடியது எல்லாம் சென்னை மக்களை கவர்ந்தது. இதனால் சிராஜ் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போதும் மக்கள் கரகோஷம் எழுப்பி சிராஜுக்கு ஆதரவு அளித்தனர் . இதனால் சிராஜும் உற்சாகம் அடைந்து கவனமாக ஆடினார்.



அதன்பின் அஸ்வின் வரிசையாக சிக்ஸ், பவுண்டரி அடித்து கலக்கினார். இதன் மூலம் அஸ்வின் செஞ்சுரி அடித்த நிலையில் அதை எல்லோரையும் விட சிராஜ்தான் அதிகம் கொண்டாடினார். அஸ்வினை விட சிராஜ்தான் சிறப்பாக கொண்டாடினார்.



சந்தோசமாக சிராஜ் குதித்தபடி ஓடி வந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்னொரு வீரரின் செஞ்சுரியை தன்னுடைய செஞ்சுரி போல சிராஜ் கொண்டாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வீரர் ஒருவர் தலையில் அடிப்பட்ட போது சிராஜ்தான் ஓடி சென்று தூக்கினார்.


மற்ற வீரர்களை சிராஜ் இவ்வளவு சிறப்பாக மதிப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிலும் இவர் சேப்பாக்கத்தில் அடித்த இரண்டு சிக்ஸ்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. அஸ்வின் அடித்த செஞ்சுரி இந்த மைதானத்தில் எப்படி பேசப்படுமோ அதேபோல் இவரின் 16 ரன்களும் கண்டிப்பாக வரலாற்றில் பேசப்படும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,