பாமாயில் உடலுக்கு நல்லதா கெட்டதா?

 பாமாயில் உடலுக்கு நல்லதா கெட்டதா?




பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது. இதுவும் ஒரு தாவர எண்ணெய். மலேசியா, இந்தோனிஷியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.


 


இந்தியா கச்சா எண்ணொயை இறக்குமதி செய்கிறது. உண்ணக்கூடிய இந்த வெஜிடபிள் ஆயில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் உள்ள அபிடோஸ் பகுதியில்தான் முதல்முறையாக பாமாயில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.



இங்கிருந்துதான் பின்னாள்களில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.


ஒரிஜினல் ஆயில் கலர்


கடற்கரை ஓரங்களில், வளர்ந்த மரத்திலிருந்து ஒரு வகையான சிவப்புநிற பழத்திலிருந்து பாமாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடற்கரைகள் அதிகமுள்ள இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த மரங்களை வளர்த்து சோதனை செய்துபார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் பாமாயில் உற்பத்தி அதிகமானது.


வகைகள்:


பழத்தின் சதைப்பகுதியிலிருந்து (Pulp) எடுப்பது மற்றும் பழத்தின் கொட்டையிலிருந்து எடுப்பது எனப் பாமாயிலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். எனவே, தூய்மையான எண்ணெயின் நிறம் சிவப்பு. இந்தோனேசியாவைத் தொடர்ந்து மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாமாயில் உற்பத்தியில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன.


 


தன்மை:


ஒரு பெரிய கொத்தில் இருக்கும் பழங்களின் சதைப்பற்றான பகுதியிலிருந்துதான் (Pulp) பெரும்பாலும் பாமாயில் எடுக்கப்படுகிறது. ஒரு கொத்தின் எடை 10-15 கிலோ இருக்கும். அதில், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் பழங்கள் இருக்கும். அதிலிருந்து 22 முதல் 25 சதவிகிதம்வரை எண்ணெய் எடுக்கலாம்.


சத்துக்கள்:


100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. வேறு எந்தப் பழத்திலும் கிடைக்காத வைட்டமின் ஈ நிறைந்துள்ள tocotrienols என்ற ரசாயனம் இதில் இருக்கிறது. அதுவும், ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,