குழந்தையின் பல் ஆரோக்கியம்

 உங்கள் குழந்தையின் பல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்.




எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பற்களை பற்றி அக்கறை கொண்டு குழந்தைகளை காலை மற்றும் இரவு என இரண்டு வேலை பற்களை துலக்க வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பற்கள் வெள்ளையாக இருக்கிறதா அல்லது அழுக்கு படிந்து உள்ளதா என்பதையும் அடிக்கடி சோதித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் பெற்றோர்களுக்கு தெரிந்திராத குழந்தைகளின் பற்கள் சார்ந்த பழக்கவழக்கங்கள் கவனிக்கப்படாமல் போகின்றன. இந்த பழக்கங்கள் நாள்பட அதிகமாகி குழந்தைகளுக்கு சிக்கலையும் பெற்றோர்களுக்கு தலைவலியையும் உண்டு பண்ணும்.



அந்த வகையில் குழந்தைகள் பின்பற்ற கூடாது அல்லது விரும்பாத பல் சார்ந்த பழக்க வழக்கங்களை இப்போது காண்போம்.


கட்டைவிரல் சப்புவது :


கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சப்ப (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும். சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். நாக்கை வெளி தள்ளுவது :


குழந்தைகள் பல காரணங்களுக்காகவும், சில சமயங்களில், வெளிப்படையான காரணங்களுக்காகவும் தங்கள் நாக்குகளை வெளியே தள்ளுவார்கள். ஒரு குழந்தை நாக்கை வெளியே தள்ளுகிறது என்றால் பசி, தாகம் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட இப்படி செய்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆகையால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பராமரிப்பாளரிடமிருந்தோ எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்து நீங்கள் செயல்பட வேண்டும்.


படுக்கையில் பால் குடிக்கும் குழந்தை: பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழுதாலும் அல்லது சும்மா படுத்து இருந்தாலும் பால் பாட்டிலை கொடுத்துவிடுவர். இதனால் என்ன ஆகும் என்றால் படுத்துக் கொண்டிருக்கும் குழந்தை பால் பாட்டிலில் பாலை குடிக்கும்பொழுது பால் முழுமையாக வயிற்றுக்குள் சென்று அடைய வாய்ப்புகள் மிக மிக குறைவு. குழந்தைகள் நீண்ட நேரம் மெதுவாக குடிப்பதாலும் வாயில் பாலை அப்படியே வைத்திருப்பதால் பாக்டீரியாக்கள் பெருகி குழந்தைகளுக்கு மோசமான சிக்கலை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் பால் வயிற்றுக்குள் செல்லாமல் நீண்ட நேரம் தொண்டையிலேயே இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. பெற்றோர்கள் இதை அறிந்து செயல்படுவது முக்கியம். வளர்ந்த குழந்தைகளும் படுக்கைக்குச் செல்லும் போது பால் குடித்தபின் வாயை கொப்பளித்து விட்டு உறங்குவது நன்மை.


அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடுவது:


சிறு வயதில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவதில்லை. எதைவேண்டுமென்றாலும் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்வார்கள். அந்த வகையில் மசாலாவுடன் கூடிய சுவையான உணவுப் பொருட்களை அடிக்கடி விரும்பி கேட்பார்கள். இந்த ஸ்னாக்ஸ்களின் சுவை அவர்களின் நாக்கில் ஒட்டிக்கொள்ளும் அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அதை கேட்பார்கள் அப்படி சாப்பிடும் போது அந்த உணவுப் பொருட்களில் துகள்கள் வாயில் சிக்கிக் கொள்ளும். இதனால் சிதைவடைந்து பற்களில் விரிசல், பற்சிதைவு, சொத்தை போன்ற பலவும் ஏற்படும். எனவே ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பின்னர் வாயைக் கொப்பளித்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்கலாம்.


மற்ற பழக்கங்கள்:


மேற்சொன்ன பழக்கவழக்கங்களை விட பல குழந்தைகள் பென்சிலை வாயில் கடிப்பது, நோட்டுப் புத்தகங்களை வாயில் வைத்துக்கொள்வது, குழந்தைகளின் விளையாட்டு சாமான்களை வாயால் கடிப்பது போன்ற பல்வேறு செயல்களை செய்வார்கள் இதானால் அந்த பொருட்களில் உள்ள கிருமிகள் அவர்களின் வாயில் சென்று வாயை ஒரு வழி ஆக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பன போன்ற விஷயங்கள் தெரியாது. பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பன போன்ற பலவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பலரும் படித்த பெற்றோர்களாக இருப்பதால் குழந்தைகளின் பல் பராமரிப்பை நீங்கள்தான் உறுதிசெய்யவேண்டும். மேலும் மேற்சொன்ன குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,