இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர் உடல்நலக் குறைவால் காலமானார்

 இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த, இங்கிலாந்து படையின் கேப்டன் டாம் மூர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 100. இங்கிலாந்து ராணி எலிசபெத், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவிச்சுருக்காங்க.


கேன்சரால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த டாம் மூர், கடந்த மாதம் 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அவரின் உடல்நிலை மேலும் மோசமான நிலையில், நேற்று உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் இரங்கல் தெரிவிச்சார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு ஹீரோ என்றும், உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டாம் மூருக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பிலும் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த கேப்டன் டாம் மூர், கொரோனா காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டாராக்கும்.
Prabhala Subash and 6 others
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,