சார்பதிவாளர் அலுவலகத்தில்நீதிமன்றங்கள் வழங்கும் இறுதி உத்தரவு மற்றும் தீர்ப்பாணைகளையும் பதிவு செய்யலாம்

 சார்பதிவாளர் அலுவலகத்தில் எப்படி ஒரு உரிமை மாற்று ஆவணங்களை பதிவு செய்கிறோமோ அதேபோல் நீதிமன்றங்கள் வழங்கும் இறுதி உத்தரவு மற்றும் தீர்ப்பாணைகளையும் பதிவு செய்யலாம்.நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ள பாகப்பிரிவினை வழக்கு தீர்ப்புகளை பதிவு செய்து கொண்டால், ஒரு பாகப்பிரிவினை பத்திரத்திற்கு என்ன மதிப்போ அதே மதிப்பு இதற்கும் உண்டு. அதைபோல் எந்த தீர்ப்பையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கென்று காலவரம்பு பதிவுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


லட்சுமி என்பவர் சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் முழு விசாரணைக்கு பின்னர் லட்சுமிக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. பின்னர் லட்சுமி அந்த தீர்ப்பை பதிவு செய்ய கோரி வாழப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு கூறி நான்கு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தாமதமாக பதிவுக்கு வந்தால் ஏற்க முடியாது என்று கூறி தீர்ப்பை பதிவு செய்ய மறுத்து விட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி ரிட் மனு தாக்கல் செய்தார்.


அதனை விசாரித்த நீதிபதி...


பதிவுச் சட்டம் பிரிவு 23 ஆனது ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான கால அளவு பற்றி கூறுகிறது. மேலும் பதிவுச் சட்டம் பிரிவுகள் 24, 25, 26 ஆகியவைகளுக்கு உட்பட்டு உயில் தவிர மற்ற ஆவணங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் அவை எழுதி கையொப்பமிட்ட நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதிவுக்கு ஏற்கக்கூடாது என்றும் இந்த பிரிவு கூறுகிறது.


அதேபோல் பிரிவு 25 ஆனது தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டது என்றால் அபராதத்துடன் பதிவு செய்யலாம் என்று கூறுகிறது.


இந்த இரண்டு பிரிவையும் கவனமாக படித்து பார்த்தால் பிரிவு 23 ஆனது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தன்மை கொண்டதாக இல்லை. ஒரு வழிவகையாக தான் இந்த பிரிவு உள்ளது. ஆவணங்களை பதிவு செய்வதில் தவிர்க்க முடியாத கால தாமதம் ஏற்பட்டால் அதை மன்னிப்பதற்கான அதிகாரம் பதிவாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் லட்சுமிக்கு தீர்ப்பு நகல் 14.06.2012 ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் 6.9.2012 ஆம் தேதி பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியே கவனத்தில் கொண்டு தவறான புரிதல் காரணமாக பதிவுக்கு மறுத்துள்ளார்.


ஆகையால் சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டார்.


சென்னை உயர் நீதிமன்றம்


W. P. No - 18805/2013


Dt - 28.11.2016


லட்சுமி Vs சார்பதிவாளர், வாழப்பாடி, சேலம்


2017-1-LW-721.


Shared by Adv. Selvakumari

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,