``அமீர், பாலா, வசந்தபாலன், வெற்றிமாறன் வரிசையில் சேரனும் ஒருவர். இந்த மாதிரியான இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். தமிழ் சினிமாவுடைய தரத்தைக் கட்டிக்காக்கும் இயக்குநர்கள்.
``நான் பாடல் எழுத வந்த காலகட்டத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு கிடைப்பதே அரிதான ஒன்றா இருந்தது. என் முதல் பாடல் சினிமாவுல இடம்பெற ஆறு வருடங்கள் ஆச்சு. நீண்ட போராட்டம், அவமானம் இதையெல்லாம் தாண்டிதான் வந்தேன். ஆனா, இன்னைக்கு இருக்கிற சூழல் அப்படியில்லை. கவிதையோ, பாடல் வரிகளோ... எழுதியதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்னு சமூக வலைதளங்கள்ல பதிவு பண்ணிட முடியுது. ஆனா, நான் பாட்டு எழுதுன காலத்திலேயும் நிறைய விமர்சனங்கள் இருந்தது. 'இன்னைக்கு இருக்கிற பாடலாசிரியர்களுக்கு இலக்கிய அறிவு இல்ல; ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுதுறாங்க'னு சொன்னாங்க. பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமார், தாமரை, யுகபாரதி, விவேகா, சினேகன்னு எல்லோரும் இந்த விமர்சனங்களைத் தாண்டிதான் முன்னேறி வந்தாங்க. நான் சீனியரா இருக்கிறதுனால, இப்போ பாடல் எழுதுறவங்களைக் குறை சொல்ல மாட்டேன். அவர்களை நாங்கள் எல்லோரும் வரவேற்கிறோம்."
பா.விஜய்
நன்றி: விகடன்
1515
No comments:
Post a Comment