ஆன்மீகம் தகவல் தெரிந்துகொள்வோம்

 ஆன்மீகம் தகவல் தெரிந்துகொள்வோம்



கேளுங்க 30 முத்தான தகவல்




1."ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பாடியவர்.......

திருமூலர் 


2. தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரம்....

கல்லால மரம் 


3. சூரியவழிபாட்டுக்கு உகந்த மலர்...

செந்தாமரை 


4. "பாலூட்டும் தாயினும் அன்பு மிக்க சிவன்' என்று பாடியவர்.....

மாணிக்கவாசகர் 


5. சுந்தரரோடு கயிலாயம் சென்ற அடியார்...

சேரமான் பெருமாள் நாயனார் 


6. வேரில் விநாயகர் சிலை செய்து வழிபடுவர்.

வெள்ளெருக்கு 


7. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பருக்கு அருள் செய்த முருகன் எங்கிருக்கிறார்?

காஞ்சி குமரக்கோட்டம் 


8. விஷ்ணுவின் கையில் உள்ள வில்லின் பெயர்....

சார்ங்கம் 


9. ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....

ருத்ரபசுபதியார் 


10. மீனாட்சியம்மன் மீது பஞ்சரத்னம் பாடியவர்...

ஆதிசங்கரர்


11 புராணரத்தினம் என்று போற்றப்படுவது...

பாகவதம் 


12. திருமால் .....நிலத்திற்குரிய கடவுள்.

முல்லை 


13. ஆலமர் செல்வன் என்று போற்றப்படுபவர்....

தட்சிணாமூர்த்தி 


14. இளைய பெருமாள் என்று யாரைக் குறிப்பிடுவர்?

லட்சுமணன் 


15. இளைய ஆழ்வார் என்று போற்றப்படுபவர்....

ராமானுஜர் 


16. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்...

சங்கரநாராயணர் 


17. திருமால் துயில் நீங்க பள்ளியெழுச்சி பாடியவர்...

தொண்டரடிப்பொடியாழ்வார் 


18. அர்ஜுனனுக்கு கொடியால் உண்டான பெயர்.....

கபித்வஜன்

(அனுமன்கொடி கொண்டவன்) 


19. முகூர்த்தம் என்பதன் கால அளவு...

90 நிமிடம் 


20. பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மந்திரம்.....

விஷ்ணு சகஸ்ரநாமம். 


2 1. விநாயகர் என்பதன் பொருள்......

உயர்ந்த தலைவர் 


22. அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அளித்த முருகன்...

வயலூர்முருகன் 


23. இசைஞானியார் என்ற பெண் நாயன்மாரின் மகன்....

சுந்தரர் 


24. இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...

ருத்ரபசுபதியார் 


25. நவநிதிகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர்...

லட்சுமி குபேரர் 


26. கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல்....

கங்காஷ்டகம் 


27. சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் 


28. உடுப்பி கிருஷ்ணரை ஆராதித்த அருளாளர்....

மத்வாச்சாரியார் 


29. சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்...

அரிச்சந்திரன் 


30. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?

சிருங்கேரி 

(சந்திரமவுலீஸ்வரர்)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,