சாவி

 தமிழ் எழுத்துலகில் தனியிடம் பிடித்த சாவி












❤ காலமான தினமின்று :
எழுத்தாளர் சாவியின் 85 வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் ராணி மைந்தன் சாவி 85 என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். அந்தப் புத்தக வெளியீட்டுவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது. முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேயர் ஸ்டாலின் முதல் இதழைப் பெற்றுக் கொண்டார். அவ்விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி, மேடையில் பேசும்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி பேச்சைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுஇருக்கைக்குத் திரும்ப முடியாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்ததும் பதறிப்போன முதல்வர் கருணாநிதியும், மேடையில் இருந்த மற்ற பிரமுகர்களும் சாவியை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால்அவருக்கு மயக்கம் தெளியவில்லை. விழா அரங்கத்திலும் பதட்டம் ஏற்பட்டது. எல்லோரும் மேடையை நோக்கி வந்தனர். உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பல்லோவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நினைவு திரும்பாலே காலமாகி விட்டார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,