வெங்காயம் பச்சையாக சாப்பிடும் பொழுது


தினமும் ஒரு வெங்காயம் பச்சையாக சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்கள்.




காய்கறிகளில் மிகவும் காரமான வகையை சேர்ந்தது இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவை. இவற்றில் பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை பச்சையாக சாப்பிட முடியாது. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். அதனால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதைப்பற்றி அவித்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதில் அதிக அளவில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெங்காயத்தை வதக்கி வேகவைத்த சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். 100கிராம் வெங்காயத்தில் வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து எளிதில் உடலில் கலக்கும் தன்மை கொண்டது.



ரத்த சோகை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சினை சரியாகும்.


தலைவலி, முழங்கால் வலி,, பார்வை மங்குதல் சளி பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு நல்லது. நெஞ்சு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் உறையும் பிரச்சனையும் சரியாகும். நுரையீரலை சுத்தம் செய்ய வெங்காயம் சிறிதளவு பயன்படுகின்றது. இருமல், சளி போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.


பொதுவாக குளிர்காலங்களில் ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவை ஏற்படும். இந்த பிரச்சினையை குணமாக வெங்காய சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்லது. மூல நோய் உள்ளவர்கள் 50 கிராம் வெங்காயம் சாற்றை எடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் 10 அல்லது 15 நாட்களில் மூலம் குணமாகும்.


பல் வலி உள்ளவர்கள் ஒரு துண்டு வெங்காயத்தை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும். இரவு தூங்கும்போது வைத்துக்கொண்டு படுத்தால் தொடர்ந்து பல் சொத்தை உள்ள இடத்தில் உள்ள புழுக்கள் கூட வெளியேறிவிடும். பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,