புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்

 புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநர் ஆணையை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார்...
புதுச்சேரிதமிழிசைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ம் தேதி நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,