காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்.:
காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்.:
வாழை தண்டு.:
மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வெள்ளை வெங்காயம்.: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
முருங்கைக்காய்.:
முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய்
சர்க்கரை வள்ளிகிழங்கு.: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்.
மக்கா சோளம்.:
இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச்சோளம்.
தக்காளி.:
தக்காளி நல்ல சிவப்பாக இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
கோவைக்காய்.:
முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.
சின்ன வெங்காயம்.:
பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.
குடை மிளகாய்.:
தோல் சுருங்காமல் ஃப்ரெஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.
காலிஃபிளவர்.:
பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
மாங்காய்.:
தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டைச் சிறிதாக இருக்கும்.
பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது).:
அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது.
புடலங்காய்.:
கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்.
உருளை கிழங்கு.:
முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.
கருணை கிழங்கு.:
முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.
சேப்பங்கிழங்கு.:
முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாகப் பார்த்து வாங்கவும்.
பெரிய வெங்காயம்.:
மேல் பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
கத்திரிக்காய்.:
தோல் மென்மையாக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்.
பீன்ஸ்.:
பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.
அவரை.:
தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
பாகற்காய்.:
பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.
வாழைப்பூ.:
மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்.
மொச்சை.:
கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்.
சௌசௌ.:
வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்.
முள்ளங்கி.:
லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு - நல்ல காய்.
வெள்ளரி.:
மேல் பகுதியில் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
Comments