பி.ஜி.வுட்ஹவுஸ்
எழுத்தாளர் நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவருமான பி.ஜி.வுட்ஹவுஸ் (பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்) (P.G.Wodehouse) காலமான தினம் இன்று
1900-ம் ஆண்டில் ‘மென் ஹூ மிஸ்ட் தேர் வோன் வெட்டிங்ஸ்’ என்ற இவரது முதல் நாவல் வெளிவந்தது. தொடர்ந்து பல வெற்றிகரமான நாவல்களை எழுதினார். இவற்றில் பல விற்பனையில் சாதனை படைத்தன. தனது நாவல்களில் பெஸ்டி வூஸ்டர், ஜீவஸ் போன்ற மீண்டும் மீண்டும் இடம்பெறும் பல கதாபாத்திரங்களைப் படைத்தார்.
கே பால்டன், ஜேரொம் கென் ஆகியோருடன் இணைந்து பிராட்வே இசை நகைச்சுவை நாடகங்களை எழுதியுள்ளார். இவை அமெரிக்க இசை நாடக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. இசை நாடகம், பாடல்கள் இயற்றியுள்ளார்.
இவரது படைப்புகள் முதல் உலகப் போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கிலேய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தன. ஜெர்மன் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார்.
ஆனால், எப்போதுமே எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தியதே இல்லை.
இன்றும் உலகம் முழுவதும் வாசிக்கப்படும் படைப்பாளியாக புகழ் பெற்றுள்ளார்.
70 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்த, சாதனைப் படைப்பாளியான பி.ஜி. வுட்ஹவுஸ் இதே நாளில் 1975-ம் ஆண்டு மறைந்தார்
Comments