மன அழுத்தத்தை குறைக்க

 மன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை மற்றும் ஊட்டச்சத்து!











மன அழுத்தம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையால் வரக்கூடிய பிரச்னை. நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய அன்றாட நடவடிக்கை, வாழ்வியல் முறை என அதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால் அது பல்வேறு உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்திவிடுகிறது.


காலையில் 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து, காலை உணவை எட்டு மணிக்கு முன் முடித்து, அலுவலகம் புறப்பட்டால் சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்று சேரலாம். ஆனால் ஏழு மணிக்கு எழுந்து 8 மணிக்கு புறப்படும் வாகனத்தைப் பிடிக்க ஓடினால், அதை பிடிக்க முடியாமல் போனால் அதுவே அன்றைய நாள் முழுக்க வெவ்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மன அழுத்தத்துக்கு வழிவகுத்து விடுகிறது.




இப்படி நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நமக்கு மன அழுத்தத்துக்குக் காரணமாகிவிடுகின்றன. இந்த வாழ்வியல் மாற்றங்களை செய்து, அதனுடன் மன அழுத்தம் குறைக்க உதவும் உணவுகளை எடுத்து வந்தால் மன அழுத்தத்துக்கு விரைவில் குட்பை சொல்ல முடியும். மன அழுத்தம் குறைக்க உதவும் உணவுகளைப் பார்ப்போம்.


ஒமேகா 3 கொழுப்பு அமிலம்


ஒமேகா 3 கொழுப்பு என்பது நம்முடைய உடலுக்கு தினசரி தேவைப்படும் அத்தியாவசிய கொழுப்பாகும். சில ஆய்வுகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மன அழுத்தத்தைக் குறைப்பதாக தெரிவிக்கின்றன. 2020ல் 638 கர்ப்பிணிகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சத்து மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. இதில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் மன அழுத்த பிரச்னை குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, தினமும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மன அழுத்தமும் குறையும்.


குங்குமப்பூ


நம்முடைய உணவில் குங்குமப்பூவை மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்கிறோம். கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பாக பிறக்க என்று கூறி கர்ப்பிணிகளுக்குக் குங்குமப்பூ கொடுக்கப்படுகிறது. குழந்தை சிவப்பாகிறதோ இல்லையோ இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி செரட்டோனின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மனம் புத்துணர்வுடன் இருக்கும். மகிழ்ச்சியான மன நிலை இருக்கும்.


வைட்டமின் டி


மன அழுத்தத்தால் அவதியுறுபவர்களை மிக அதிக அளவில் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மீண்டும் அவர்களுக்கு வைட்டமின் டி ஊட்டச்சத்தை அளித்தபோது ஒரு சில வாரங்களில் அவர்களின் மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி தினமும் வைட்டமின் டி மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,