பித்துக்குளி முருகதாஸ்.

 


கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்.

தலையில் காவித்துண்டு கட்டி கண்ணில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி தருவார் பித்துக்குளி முருகதாஸ்.
கந்தர் அனுபூதி, முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். அவர் பாடிய அலைபாயுதே கண்ணா பாடல் பிரபலமானது.
பித்துக்குளி பெயர்காரணம்
சிறுவயதில், தெருவில் விளையாடும் போது, ரோட்டில் போகும் ஒருவர் மீது கல்லெறிய அடிபட்ட பெரியவரோ பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய... அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)? ஒரு நாள் இல்லை ஒரு நாள், என்னையப் போலவே நீயும் ஆகப் போகிறார் என்று வேடிக்கையாக கூறவே அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது. முருகனுக்கு தாசன்... முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் பித்துக்குளி என்றும் தன் பெயருக்கு முன்னாள் சேர்த்துக்கொண்டார்.
துறவறம் - இல்லறம்
சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். அறுபது வயதில், உடன் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்!
தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!
வெளிநாடுகளுக்கு பயணம்
தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தியாகராஜர் விருது, கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்பட பல இசை விருதுகளை பித்துக்குளி முருகதாஸ் பெற்றுள்ளார்.
விருதுகள் கவுரவம்
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு 1984-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணிவிருதை வழங்கி கவுரவித்தது. முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளில் பிறந்து அதே முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி நாளில் இறைவனடி சேர்ந்துள்ளார் முருக பக்தர் பித்துக்குளி முருகதாஸ்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,