மாசி மகம்

 மாசி மகம் 2021 என்றால் என்ன? : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்


மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம். மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம். ​மகா மக பெருவிழா : தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விளாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். அப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாசி மகா நட்சத்திரத்தன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவங்களிலிருந்து விடுபட, பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக ஐதீகம். இந்நாளில் கடலில் நீராடி இறைவனை வழிபடுவதாலும் நற்பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. மாசி மகம் நட்சத்திரம் எப்போது? அந்த அற்புதமான திருநாள் 27.02.2021 இன்று (சனிக்கிழமை) வருகின்றது. 26.02.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது. மறுநாள் (27.02.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும். மாசி மகத்தின் சிறப்பு - பித்ருக்களை குளிர்விக்க ஏற்ற நாள் மாசி மகம் புராண நிகழ்வு : ஒரு காலத்தில் வருண பகவானை பிரமஹத்தி தோஷம் பிடித்திருந்தது. அது அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. அதிலிருந்து விடுபட சிவ பெருமானை வேண்டினார். அவரும் வருணனை காப்பாற்றி அவரை விடுவித்த தினம். அதனால் இந்த தினத்தில் புண்ணிய நதி, குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் தீரும். சிவபெருமானின் பிறப்பு மற்றும் ஈசனின் காதல் கதை ​பார்வதி தேவி குறித்து கந்த புராணம் : ஒரு மாசி மக நந்நாளில் தட்ச பிரஜாபதி மற்றும் அவரது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினார். அப்போது தாமரை மலரிலிருந்து ஒரு வலம்புரிச் சங்கை கண்டெடுத்தார். அதை பிரஜாபதி எடுத்த மாத்திரத்திலேயே அது ஒரு பெண் குழந்தை உருவாக ஆனது. இது சிவபெருமானின் அருளால் கிடைத்ததாக நினைத்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து சென்று அம்பிகைக்கு தாட்சாயிணி என நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது. கும்பகோணத்தில் மாசிமகம் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ​சங்க காலம் தொட்டு நடைபெறும் முதல் விழா : சங்க காலம் தொட்டு நடைபெறும் முதல் விழா : சங்ககால இலக்கியங்களிலும், செப்பேடுகளில், கல்வெட்டுகளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலக்கியங்கள் மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குக்டு மருதனார் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். சங்ககால பாண்டிய மன்னன் முந்நீர் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக 9வது புறநானூறு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் தன்னுடைய மயிலாப்பூர் பதிகத்தில் கபாலீஸ்வரரின் மாசி மகக் கடலாடு விழாவைப் பற்றி கூறியுள்ளார்


.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,