அஜீரணம்

 அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேர


த்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து 'செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.


பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் (Indigestion) வரும்.செரிமான நீரின் வேலையை குறைக்க உண்ணும் போதே உணவை நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும்.
அதிகமான காரம், அதிகமான புளிப்பு மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உண்ணும் போது இயல்பாக சுரக்கும் செரிமான (Digestion) நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் அஜீரணம் வர வாய்ப்புண்டு. இந்த வகையான உணவுகளை உண்ணும் போது உடலுக்குள் உணவு செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் எரிச்சலுக்கு ஆளாகும்.


கீழே பலவகையான அஜீரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாறான மருந்தை எடுத்து கொள்ளுங்கள்.


* ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.* அஜீரணம் குணமாக ஓமம் மற்றும் கருப்பட்டி கலந்து நம் வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம்.* கருப்பட்டியுடன் சிறிது சுக்கு சேர்த்து அவற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மருந்தை தயார் செய்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி நல்ல பசி ஏற்படும்.* சீரகத்தை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.


* அஜீரண கோளாறு ஏற்பட்டால் வெற்றிலையுடன் (பாக்கு சுண்ணாம்பு இல்லாமல்) நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.


* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,