எல்.ஆர்.ஈஸ்வரி மூக்குத்தி அம்மன்

 `


மூக்குத்தி அம்மன்’ படத்தில் திருவிழாவில் வரும் அம்மன் பாடல் ஒன்றை நான் பாடணும்னு முடிவெடுத்த ஆர்.ஜே பாலாஜி என்னை அணுகினார். `பாடுவதற்காகத்தானே இந்த ஜென்மம் எடுத்திருக்கேன். பாடத் தயார்’னு சொன்னேன். இசைத்துறைக்கு வந்த தொடக்கம் முதலே திரைப்படத்தின் கதை கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. நம்பி அழைக்கும் இசையமைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடுவதே என் நோக்கம். அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் பாடல் ரெக்கார்டிங் போனேன். பாலாஜி தம்பியும், புதிய இசையமைப்பாளரான கிரிஷ் தம்பியும் பாடல் சூழலை விளக்கி என் விருப்பம்போல பாடச் சொன்னாங்க. பல்வேறு விதங்களில் அந்தப் பாடலைப் பாடினேன். `உங்களுக்குப் பிடித்ததை இறுதியாகப் பயன்படுத்திக்கோங்க’ன்னு சொன்னேன். சில மணிநேரத்தில் பாடல் ஒலிப்பதிவு முடிஞ்சுடுச்சு.

மூக்குத்தி அம்மன்மூக்குத்தி அம்மன்
`இந்தப் பாடலின் காட்சியமைப்பிலும் நீங்களே பாடுவதுபோல நடிக்கணும்’னு பாலாஜி வலியுறுத்தவே, கடந்த ஜனவரில் நாகர்கோவிலில் நடந்த ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். குதூகலம்னா எனக்கு ரொம்பவே இஷ்டம். மொத்தப் படக்குழுவும் ஆரவாரம் செஞ்சு என்னை உற்சாகப்படுத்தி வரவேற்க, கூட்டத்தில் நானும் குழந்தையாகி நடனமாடி மகிழ்ந்தேன். தினேஷ் மாஸ்டர் சிறப்பா கோரியோகிராபி செய்திருந்தார். இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியாகியபோது பலரும் எனக்கு வாழ்த்து சொன்னாங்க

நான் பார்த்து வளர்ந்த, பாகுபாடுகள் பார்க்காத பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு வாழ்த்து சொல்லியிருப்பது மகிழ்ச்சியா இருக்கு. தியேட்டரில் பக்திப் பாடல்களுக்கு மக்கள் நடனமாடி ஆரவாரம் செய்வாங்க. அந்த உற்சாகமும் பரவசமும் வீட்டில் இருந்து ஓ.டி.டி தளத்துல படம் பார்க்கும்போது இருக்காது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்தான், சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு” என்பவர், திரையிசையில் 62 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,