அழகிய காதலே
அழகிய காதலே
காலங்கள் கடந்தும்
கருப்பு வெள்ளையாய்
களையிழந்து போனாலும்
இன்னும் துளிகூட
காதல் குறையாமலும்
காத்திருப்பு தொடர்கிறதே
முத்தமிழே முகில்
நிலவே முக்கனியே
என் மும்தாஜே
முப்பொழுதும் உன்
வரவுக்காகவே தான்
என்றும் காத்திருக்கிறேன்
ஒருமுறை என்
முகம் காண
கதவுகள் திறந்து
நீ வருவாயென
காதலைச் சுமந்தே
கல்லறையின் வாசல்
பார்த்து பகல்
இரவு தெரியாமல்
காதல் பித்தனாய்
கவிதை எழுதியே
எத்தனைக் காலம்
ஆனாலும் காத்திருப்பேனே
Comments