இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முலாம்பழம்.

 இதய  ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முலாம்பழம்.





முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌ன. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழம் என்று சித்த மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது. முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களை பற்றி பார்ப்போம்:


உடல் எடை


முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மிக விரைவில் குறையும்.



புற்றுநோய்


முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளது. இது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்க உதவுகின்றது.


இதய ஆரோக்கியம்


முலாம் பழத்தில் உள்ள அடினோசைன், நமது உடம்பின் ரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கின்றது.


கண் பார்வை


விட்டமின் A சத்துக்கள் முலாம் பழத்தில் அதிகமாக உள்ளதால், இது கண் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.


மூளையின் ஆரோக்கியம்


முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதை தினமும் ஜூஸ் செய்து குடித்தால், இதயத் துடிப்பை சீராக்கி, நமது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச் சோர்வு பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது.


நீரிழிவு நோய்


நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும் குறைந்த சர்க்கரை மற்றும் கலோரி உள்ள உணவுகளை உண்பதால், அதிகப்படியான சோர்வை உணரக் கூடும். இதற்கு அவர்கள் முலாம் பழ ஜூஸ் சாப்பிட்டால் முழுமையான உடல் எனர்ஜி கிடைக்குமாம்.


செரிமானப் பிரச்சனை


முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இது செரிமானப் பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கும் அமிலத் தன்மையை அகற்றி, செரிமான பிரச்சனை இல்லாமல் தடுக்கின்றது.


காயங்கள்


முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தி, சருமத்தின் உறுதித் தன்மையை பாதுகாக்கின்றது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,